சுவிற்சலாந்து கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் நிர்வாகம் மக்கள் முரண்பாடுகள்..( காணொளி )

அந்த நாட்டில் வாழும் அதே ஆலயத்தின் அடியார்கள் கூறும் கருத்துக்களை கேட்டுப்பாருங்கள்..

உண்மை என்ன..? மக்கள் எப்படியுள்ளார்கள்..? உலகம் வளர்ந்த அளவுக்கு புலம் பெயர் தமிழர் சிந்தனை வளர்ந்துள்ளதா..? அடுத்த கட்டம் என்ன..? விரட்டப்பட்ட ஐயர் வருவதா தீர்வு..? இந்த நிர்வாகம் தவறென்றால் சரியான நிர்வாகம் என ஒரு நிர்வாகம் தமிழரிடையே எங்காவது இருக்கிறதா..? கணக்கு காட்டி என்ன பயன்..? கணக்கு காட்டியவர் தமிழ் சமுதாயத்தில் மதிக்கப்பட்டார்களா..? நேர்மையாளரை பாதுகாக்கும் கடமையை இதே மக்கள் முன்னைய கால சமுதாய பிரச்சனையில் காட்டினார்களா..? ஐயர் விரட்டப்பட்டபோது துள்ளி எழும் மக்கள் இந்த சமுதாயத்திற்காக உண்மையாக பாடுபட்டவர்கள் காயடிக்கப்பட்டபோது ஏன் இதுபோல போர்க்கோலம் பூணவில்லை..? இப்படி ஏராளம் கேள்விகளுக்கு இந்த காணொளி பதில் தரலாம்.

இதை ஓர் ஆய்வாக பார்க்கவும் காரணம் வரப்போகும் புதிய புலம் பெயர் சூறாவளியின் ஆரம்ப இடிமுழக்கமாக இது இருக்கிறது. சமுதாயம் படிப்படியாக முன்னேறும் ஒரு படிக்கட்டாகவும் இது தெரிகிறது.

குறிப்பு : இது நமது கருத்தல்ல சுவிஸ் மக்கள் கூறுகிறார்கள் கேட்கிறோம் அவ்வளவு மட்டுமே..

அலைகள் 31.12.2018

Related posts