அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை கைவிட முடிவு?

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005-ல் வெளியான அந்நியன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து இயக்க உள்ளதாகவும், விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிப்பார் என்றும் ஷங்கர் சமீபத்தில் அறிவித்தார். இதற்கு அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். அந்நியன் படத்தின் கதைக்கான உரிமை தன்னிடம் உள்ளது என்றும், தனது அனுமதி பெறாமல் இந்தியில் ரீமேக் செய்ய முடியாது என்றும் கூறினார். இதற்கு பதில் அளித்து ஷங்கர் கூறும்போது, “அந்நியன் கதை என்னுடையது. எனவே இந்தியில் ரீமேக் செய்ய யாருடைய அனுமதியும் தேவை இல்லை'' என்றார். ஆனாலும் மோதல் நீடித்து வருகிறது. திரைப்பட வர்த்தக சபையில் அந்நியன் இந்தி ரீமேக்கை தடை செய்ய வேண்டும் என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன் புகார் அளித்து இருக்கிறார். இதனால் படவேலைகளை…

முதல் தடவையாக இந்தி படத்தில் நடிக்கும் சமந்தா

காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர். சமந்தா கவர்ச்சியாக நடிப்பது நாகசைதன்யா குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்றும், குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தார் என்றும், ஆடை வடிவமைப்பாளருடன் சமந்தா நட்பாக பழகுவது நாகசைதன்யாவுக்கு பிடிக்கவில்லை என்றும், இதுவே விவாகரத்துக்கு காரணம் என்றும் தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவியது. இது தவறான வதந்தி என்று சமந்தா மறுத்தார். சமந்தா ஏற்கனவே தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் தமிழ், தெலுங்கில் தயாராகும் சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு முதல் தடவையாக இந்தி படத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே பேமிலிமேன் 2…

விக்னேஷ் சிவன் – நயன் ஜோடி தயாரிக்கிறது

ரெளடி பிக்சர்ஸ் தயாரிப்பில் கவின் நடிக்கும் படத்துக்கு 'ஊர்குருவி' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. 'நெற்றிக்கண்' படத்தைத் தொடர்ந்து, படங்கள் தயாரிக்க கதைகள் கேட்டு வருகிறது விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. மேலும், 'கூழாங்கல்', 'ராக்கி' உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளது. ஆனால், எப்போது வெளியீடு என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இதில் 'கூழாங்கல்' திரைப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகின்றன. தற்போது அறிமுக இயக்குநர் அருண் இயக்கவுள்ள அடுத்த படத்தைத் தயாரிக்கவுள்ளது விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (அக்டோபர் 15) விஜயதசமியை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. 'ஊர்குருவி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகனாக கவின் நடிக்கவுள்ளார். நாயகனாக வாணி போஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும் யாரெல்லாம் நடிக்கிறார்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்…

அரண்மனை 3 – ஒழுங்காக கட்டி முடிக்கப்படாத மாளிகை

தன்னையும், தன் காதலன், மகளையும் கொன்றவர்களைப் பழிவாங்கும் பெண் பேயின் கதையே ‘அரண்மனை 3’. ஜமீன்தார் சம்பத் தன் மகள், அக்கா, தங்கை உள்ளிட்ட உறவினர்களுடன் அரண்மனையில் வாழ்கிறார். தன் மகள் அந்த வீட்டில் பேய் இருப்பதாகச் சொல்கிறார். அதை நம்பாமல் மகள் பொய் சொல்வதாக நினைத்து ஹாஸ்டலுக்கு அனுப்பி, படிக்க வைக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு சம்பத் மகள் ராஷி கண்ணா, தன்னைத் தூக்கி வளர்த்த டிரைவர் மரணம் அடைந்ததை அறிந்து அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள ஊருக்கு வருகிறார். அப்போதும் அந்த அரண்மனையில் பேய் இருப்பது தெரிகிறது. ராஷி கண்ணாவின் அத்தை பேத்தியான சிறுமிக்கும் பேய் நடமாட்டம் இருப்பது தெரிகிறது. அந்தப் பேயைத் தோழியாக நினைத்து அவரும் விளையாடுகிறார். அச்சிறுமியின் தந்தை சுந்தர்.சி வந்தவுடன் இந்த மர்மங்களை அறிந்து அதைக் களைய முற்படுகிறார். அதற்குப் பிறகு…

மிஷ்கின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா – விதார்த்

மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விதார்த் இணைந்து நடிக்கவுள்ளனர். ஆண்ட்ரியா, பூர்ணா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'பிசாசு 2' படத்தை இயக்கியுள்ளார் மிஷ்கின். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படத்தை முருகானந்தம் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படம் முடிவாகியுள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யா, விதார்த் இணைந்து நடிக்கவுள்ளனர். அவர்களுடன் நடிக்கவுள்ளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தையும் முருகானந்தமே தயாரிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்கள்.

பிரகாஷ்ராஜ் அணியினர் 11 பேரும் ராஜினாமா

நடந்து முடிந்த தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் வென்ற பிரகாஷ்ராஜ் அணியினர் 11 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தெலுங்குத் திரையுலகின் நடிகர்கள் சங்கமான மா அமைப்பின் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர் மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தலைமையிலான அணி வெற்றி பெற்றுள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் அணி தோல்வியைத் தழுவியது. பிரகாஷ்ராஜ் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் கிடையாது, வெளியிலிருந்து வந்தவர், தெலுங்கு கலைஞர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்கிற பிரச்சாரமே பிரகாஷ்ராஜின் தோல்விக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, தன்னை ஒரு அந்நியனாகப் பார்க்கும் நடிகர்களிடையே தான் இருக்க விரும்பவில்லை என்று கூறி சங்கத்திலிருந்து ராஜினாமா செய்தார் பிரகாஷ்ராஜ். இந்நிலையில் நேற்று (13.10.21) பிரகாஷ்ராஜ் அணியிலிருந்து மா அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களாகவும், சங்கப் பொறுப்பாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட 11 பேரும் தங்கள் பதவிகளை…

டாக்டர்’ கொஞ்சம் ஏமாற்றம்தான்..

'டாக்டர்' படம் கொஞ்சம் ஏமாற்றம்தான் என்று எழுத்தாளர், வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டாக்டர்'. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பல்வேறு திரையரங்குகளில் வார நாட்களில் கூட அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. மீண்டும் திரையரங்குகளுக்கு மக்கள் திரும்பியிருப்பதால், திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். பல்வேறு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினரைப் பாராட்டி வருகிறார்கள். தற்போது 'டாக்டர்' படத்தைப் பார்த்துவிட்டு எழுத்தாளர், வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: "டார்க் காமெடி படம் என்பதால் முதல் காரியமாக தர்க்கரீதியான கேள்விகள் எழுப்பும் மூளையை தியேட்டருக்கு வெளியிலேயே ஒப்படைத்துவிட வேண்டும். எதையும் அசாதரணமாக அணுகும் நியாயஸ்தராக மிலிட்டரி டாக்டர். தன்னை நிராகரிக்கும் பெண்ணின் வீட்டில் நிகழும்…

இன்று மாலை வெளியாகிறது ‘அண்ணாத்த’ டீசர்

விஸ்வாசம் படத்திற்கு பின் டைரக்டர் சிறுத்தை சிவா தற்போது ஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கியுள்ளார். ரஜினியுடன் நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் போன்றோர் நடித்துள்ளார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார். சில நாட்களுக்கு முன் 'அண்ணாத்த' முதல் பார்வை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. படத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடலும் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகி பெரிதும் ரசிக்கப்பட்டது. இந்த நிலையில் 'அண்ணாத்த' படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'அண்ணாத்த' படம் தீபாவளிக்கு, நவம்பர் 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில்

11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில், முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த பிலீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டை முன்னகர்த்தப் போவதில்லையென சட்ட மாஅதிபர் அறிவித்துள்ளார். குறித்த வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தை மீளப் பெறுவதாக, சட்ட மாஅதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று (13) அறிவித்தார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் சட்ட மாஅதிபரின் முடிவை இரத்துசெய்யும் ஆணையை பிறப்பிக்குமாறு கோரி, கரன்னாகொட தாக்கல் செய்த மனு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே சந்தர்ப்பத்திலேயே இது அறிவிக்கப்பட்டது. இம்மனு விசாரணை, மேன்முறையீட்டு நீதியர்சர்களான சோபித ராஜகருணா, தம்மிக கணேபொல ஆகியோர் முன்னிலையில், எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச…

மீண்டும் நடிக்கும் லட்சுமி மேனன்

விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 2016-ல் விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்து விட்டு கல்லூரி படிப்பை தொடர்ந்தார். அதன்பிறகு சில வருடங்கள் படங்களில் நடிக்கவில்லை. பின்னர் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தில் நடித்து இருந்தார். தற்போது சில வருட இடைவெளிக்கு பிறகு ‘ஏஜிபி‘ என்ற படத்தில் நடிக்கிறார். இது திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதுவரை வணிக ரீதியிலான படங்களில் நடித்த லட்சுமி மேனன் முதல் தடவையாக இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான மனநோயாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். ஒரு பெண்ணுக்குள் மூன்று கதாபாத்திரங்கள் நுழைந்து பாதிப்புக்கு உள்ளாக்கும் கதாபாத்திரத்தில் லட்சுமி மேனன் வருகிறார்.…