வெளிவராத படங்களின் கதாநாயகன் கமலை வைத்து படம்..

கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் ‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடங்கியது. பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். கமல்ஹாசன் நடித்து, ‘விக்ரம்’ என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் வெளிவந்தது. அதில் அவர் ஜோடியாக இந்தி நடிகை டிம்பிள் கபாடியா நடித்து இருந்தார். மறைந்த டைரக்டர் ராஜசேகர் இயக்கியிருந்தார். நீண்ட பல வருட இடைவெளிக்குப்பின், ‘விக்ரம்’ என்ற பெயரில் இன்னொரு படம் தயாராகிறது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக் கிறார்கள். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிக்கும் முதல் காட்சியை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் படமாக்கினார். தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுகிறது.

தமிழ் சினிமாவில், 40 வருடங்களை கடந்த கதாநாயகிகள்

தமிழ் திரையுலகில், ஒரு சில கதாநாயகிகளே 40 வருடங்களை கடந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 4 பேர் முக்கியமானவர்கள். அவர்கள் வருமாறு:- 1. ராதிகா சரத்குமார். அறிமுகமான படம்: கிழக்கே போகும் ரெயில். வெளியான வருடம்: 1978. 2. அம்பிகா. அறிமுகமான படம்: தரையில் வாழும் மீன்கள். வெளியான வருடம்: 1980. 3. விஜயசாந்தி. அறிமுகமான படம்: கல்லுக்குள் ஈரம். வெளியான வருடம்: 1980. 4. பூர்ணிமா பாக்யராஜ்: அறிமுகமான படம்: நெஞ்சில் ஒரு முள். வெளியான வருடம்: 1981. இவர்களை அடுத்து ரேவதி 38 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். அறிமுகமான படம்: மண்வாசனை. வெளியான வருடம்: 1983. ரம்யா கிருஷ்ணன், 37 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். அறிமுகமான படம்: வெள்ளை மனசு. வெளியான வருடம்: 1984.

சற்குணம் டைரக்‌ஷனில் ராஜ்கிரண்-அதர்வா

‘களவாணி, ’ ‘வாகை சூடவா’ படங்களை இயக்கிய டைரக்டர் சற்குணம் அடுத்து இயக்கும் புதிய படத்தில், ராஜ்கிரண்-அதர்வா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகி முடிவாகவில்லை. ராஜ்கிரண், அதர்வாவுடன் ராதிகா சரத்குமார், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், ரவிகாளே, சி.வி.குமார், சிங்கம் புலி, பாலசரவணன், துரை சுதாகர் ஆகியோரும் நடிக் கிறார்கள். லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ‘‘குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் பொழுதுபோக்கு படம், இது. யதார்த்தமான காட்சிகளுடன் கூடிய கதை. காவிரி ஆற்றுப் படுகை, வெற்றிலை தோட்டம் என பசுமையாக இருக்கும் திருவையாறை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது’’ என்று டைரக்டர் சற்குணம் கூறினார்.

சூர்யா நடிக்கும் 40வது படம் ‘எதற்கும் துணிந்தவன்’

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40வது படத்திற்கு 'எதற்கும் துணிந்தவன்' என பெயரிடப்பட்டுள்ளது. சூர்யாவின் நடிப்பில் வெளியாக இருக்கும் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் தற்பொழுது ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் 40 ஆவது படங்கள் உருவாகிறது. இந்நிலையில், நாளை நடிகர் சூர்யா தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், சூர்யாவின் 40 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. எதற்கும் துணிந்தவன்' படத்தின் முதல் பார்வையை வெளியிட்டது படக்குழு. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

படப்பிடிப்பில் விஷால் காயம்

வில்லனுடன் விஷால் மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது இரும்புத்தடுப்பில் விழுந்ததில் விஷால் காயம் அடைந்தார். விஷால் தனது 31-வது படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயர் வைக்காத இந்த படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்குகிறார். நாயகியாக ஹயாத்தி மற்றும் யோகிபாபு, ரவீனா ஆகியோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தற்போது வில்லனுடன் விஷால் மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. விஷாலை வில்லன் தூக்கி எறிவதுபோல் காட்சியை எடுத்தனர். அப்போது விஷால் ஒரு இரும்புத்தடுப்பில் விழுந்தார். இதில் அவரது முதுகில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக பிசியோதெரபி மருத்துவர் வரவழைக்கப்பட்டு விஷாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. விஷால் கைவசம் எனிமி, துப்பறிவாளன் 2 ஆகிய மேலும் 2 படங்கள் உள்ளன. எனிமி படப்பிடிப்பு…

ஆபாச படம் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உண்டா?

ஆபாச படம் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உண்டா? மும்பை இணை கமிஷனர் மிலிந்த் பரம்பே இதுகுறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது:- சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களையும், மாடல் அழகிகளையும் ஆபாச படங்களில் நடிக்க வைத்து அவற்றை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து கோடி கோடியாய் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைதாகி இருப்பது இந்தி பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு ஆபாச படத்துக்கு ரூ.5 லட்சம் வரை அவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. ராஜ்குந்த்ராவை போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆபாச படம் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா? அல்லது அவருக்கு தெரியாமலேயே ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து வெளிநாட்டு செயலிகளுக்கு விற்பனை செய்தாரா என்று போலீசார்…

நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி வெளியீடு

இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகை நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்துக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள இந்தத் திரைப்படத்தில் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ----- 6 புதிய படங்களில் நடிக்க நயன்தாரா தயாராகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, விஜய்சேதுபதி ஜோடியாக காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நெற்றிக்கண் படத்தில் பார்வையற்றவராக வருகிறார்.…

வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் புதிய படமொன்றில் ஆண்ட்ரியா நடித்து வருவது உறுதியாகியுள்ளது. விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், படங்கள் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் வெற்றிமாறன். லாரன்ஸ் நடிக்கவுள்ள 'அதிகாரம்' படத்தை ஃபைவ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார். அதற்கு முன்னதாக, வெற்றிமாறன் தயாரித்து வரும் மற்றொரு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனை அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இயக்கி வருகிறார். இதில் ஆண்ட்ரியா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முழுப் படப்பிடிப்பையும் சென்னைக்குள்ளேயே முடித்துவிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் ஆண்ட்ரியா ‘வட சென்னை’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ’ஆடுகளம்’ படத்தில் நாயகி…

சுந்தரா டிராவல்ஸ் இரண்டாம் பாகம்

முரளி, வடிவேலு நடித்து 2002-ல் வெளியாகி வெற்றி பெற்ற சுந்தரா டிராவல்ஸ் நகைச்சுவை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வந்தது. கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, தனுசின் வேலை இல்லா பட்டதாரி, சுந்தர்.சி.யின் அரண்மனை ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களும் வந்துள்ளன. சூர்யாவின் சிங்கம். லாரன்சின் காஞ்சனா ஆகிய படங்களின் 3 பாகங்கள் வெளியானது. தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் தயாராகிறது. இந்த நிலையில் முரளி, வடிவேலு நடித்து 2002-ல் வெளியாகி வெற்றி பெற்ற சுந்தரா டிராவல்ஸ் நகைச்சுவை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இதில் முரளி கதாபாத்திரத்தில் கருணாகரனும், வடிவேலு கதாபாத்திரத்தில்…

திருமணம்போல விவாகரத்தும் புனிதமானதுதான்..

தமிழில் கோரிப்பாளையம், மைதானம், சாட்டை, சோக்காலி, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சுவாசிகா மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கேரளாவில் வரதட்சணை கொடுமைகள் அதிகம் நடப்பதாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் சுவாசிகா அளித்துள்ள பேட்டி வருமாறு:- ''திருமண வாழ்க்கையில் கஷ்டங்களை சந்திக்கும் பெண்கள் சமூகம் என்ன நினைக்குமோ என்ற பயம், குடும்பம் போன்ற பல காரணங்களால் எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளனர். நான் திருமணம் செய்து கொள்ளும்போது பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை தீர்க்க முடிந்தவரை முயற்சி செய்வேன். நிலைமை கைமீறி போனால் விவாகரத்து பற்றி யோசிப்பேன். மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்வது பயங்கரமானது. இரண்டு பேர் மகிழ்ச்சியோடு வாழ திருமணம் செய்து கொள்கின்றனர். தாங்கமுடியாத பிரச்சினைகள் வரும்போது விவாகரத்து செய்து கொள்வது உயிர்களை மாய்க்காத ஒரு வழியாகும். விவாகரத்தும், திருமணம்போன்று புனிதமானதுதான். அது ஒரு…