நடிகை பிரியா பவானி சங்கர் திருமண நிச்சயம் ?

நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் அவரது நீண்ட கால காதலரான ராஜவேல் ராஜ் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரியா பவானி சங்கர் கடந்த 2017 ம் ஆண்டு வெளியான “மேயாத மான்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம், யானை, திருச்சிற்றம்பலம், பத்து தல, டிமான்டி காலனி 2 என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் ரவி தேஜா நடிப்பில் வெளியான “இருமுடி” திரைப்படத்தில் பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது. பிரியா பவானி சங்கர் நடித்த ‘டிமான்டி காலனி 3’ படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. பிரியா பவானி சங்கரும் ராஜ்வேல் ராஜும் கல்லூரி காலத்திலிருந்தே ஒருவரையொருவர் அறிவர் என்பதும், கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் காதலித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் தங்களது காதல் உறவை வெளிப்படையாகவே இருவரும் எப்போதோ உறுதிப்படுத்தியிருந்தனர்.சினிமா துறையில் பிசியாக இருந்தாலும் தங்களது தனிப்பட்ட உறவுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்து வந்த இந்த ஜோடி, தற்போது தங்களது உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.தற்போது இருவருக்கும் ரகசியமாக திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.காதலர் ராஜ்வேலுடன் பிரியா பவானி சங்கரின் புகைப்படங்கள் வெளியானதே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Related posts