மனைவி ஜோதிகா குறித்து பேசிய சூர்யா.

தனது வாழ்க்கையில் தான் இந்த நிலையில் இருப்பதற்கும், சரியான வழியில் செல்வதற்கும் மனைவியின் வழிகாட்டுதலே முக்கியக் காரணம் என்று ஜோதிகா குறித்து சூர்யா பேசியுள்ளார். ஜித்து மாதவன் இயக்கும் இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்கிறார்.சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், நடிகர் சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு.‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று குறிப்பிட்ட அவர்,தனது வாழ்க்கையில் இன்று தான் இந்த நிலையில் இருப்பதற்கும், சரியான வழியில் செல்வதற்கும் தன் மனைவியின் வழிகாட்டுதலே முக்கியக் காரணம் என்று தெரிவித்தார். தன் வாழ்க்கையில் பல தவறுகளைத் செய்திருந்தாலும், எல்லாவற்றிலும் உறுதுணையாக நின்று தன்னை வழிநடத்தியவர் ஜோதிகா என்று அவர் பெருமிதத்துடன் கூறினார். ஜோதிகா ஒரு சிறந்த தாய், சிறந்த தோழி, மிகச்சிறந்த வாழ்க்கைத்துணை மட்டுமல்லாமல், மிகவும் வலிமையான ஒரு பெண் என்றும் சூர்யா புகழாரம் சூட்டினார். பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ஜோதிகா மகிழ்ச்சியுடன் அவரை நோக்கி முத்தங்களைப் பறக்க விட்டார். சீன்’ படத்தின் வருகைக்காக, தனது ‘ஓம்’ பட வெளியீட்டை தள்ளிவைப்பதாக அறிவித்த நடிகர் தனுசுக்கு நடிகர் சூர்யா இந்த மேடையில் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.ஜித்து மாதவனின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த குடும்பத் திரைப்படமான ‘சீன்’ ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Related posts