சென்னையை அடுத்த மாங்காடு அருகே உள்ள கோவூரில் நடிகர் அஜித்குமாருக்கு முழு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அஜித்தை முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்’ சார்பில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.மேலும், அவருக்காக 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கோவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகத்தினர்’ அறிவித்துள்ளனர். கோவூரில் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்துக்கு, அதன் தலைவர் பாபு தலைமை தாங்கினார். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், அஜித்குமாரின் முழு உருவச் சிலையை கட்சித் தலைவர் பாபு திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், அஜித்குமாரின் முழு உருவச் சிலையை கட்சித் தலைவர் பாபு திறந்து வைத்தார்.தொடர்ந்து, சிலைக்கு பால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.மேலும், 108 தேங்காய்களை உடைத்தும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். அப்போது, நடிகர் அஜித்குமார் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் கட்சியினர் அழைப்பு விடுத்தனர்.இதற்கிடையே, கோவூரில் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நடிகர் அஜித்குமாருக்காகப் பிரத்யேகமாகக் கோவில் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக கட்சித் தலைவர் பாபு தெரிவித்துள்ளார்.குஸ்புவுக்கு கோயில் கட்டி குத்தாட்டம் போட்டவர்கள் இனி நடிகர் விஜய்க்கும் கோயில் கட்டலாம். அவர் கிறீத்தவர் என்பதால் தேவாலயமும் கட்டலாம். அறிவு குறைந்த தமிழினத்தை என்னதான் செய்வது..?
