மோகன்லாலுடன் நடிப்பது வரம்: பாக்யஸ்ரீ போர்ஸ் மகிழ்ச்சி

மோகன்​லால் நடித்து வரும் ‘ஆபரேஷன் கங்​கா’ திரைப்​படத்​தின் படப்​பிடிப்பு இப்​போது நடை​பெற்று வரு​கிறது. இதில் பாலிவுட் நடிகர் அர்​ஜுன் ராம்​பால், ஆதில் ஹுசைன், பாக்யஸ்ரீ போர்​ஸ், ஆர்​.​பார்த்​திபன் உள்​ளிட்ட பலர் நடிக்​கின்​றனர்.

மோகன்​லாலின் 367-வது படமான இதை, ‘மேப்​படி​யான்’ படத்தை இயக்​கிய விஷ்ணு மோகன் எழுதி இயக்​கு​கிறார். உக்​ரைன்​–ரஷ்யா போரின் பின்​னணி​யில் இந்​தியா மேற்​கொண்ட மீட்பு நடவடிக்​கைக்கு ‘ஆபரேஷன் கங்​கா’ என்று பெயர் வைத்​திருந்​தனர். இந்​தச் சம்​பவத்தை அடிப்​படை​யாகக் கொண்டு இப்​படம் தயா​ராகிறது.

இதன் படப்​பிடிப்​பில் பங்​கேற்ற பாக்ய போர்​ஸ், மோகன்​லாலுடன் நடிப்​பது ஆசீர்​வாதம் என்று தெரி​வித்​துள்​ளார். இதுபற்றி அவர், “உங்​களோடு இணைந்து நடிப்​பதை வரமாக உணர்​கிறேன். ஒவ்​வொரு நாள் படப்​பிடிப்​பின் போதும் உங்​களது கண்​களின்​ மூலம்​ சினி​மாவை காண​வும்​ உங்​களிட​மிருந்​து கற்​றுக்​கொள்​ள​வும்​ முடிகிறது. நீங்​கள்​ உண்​மை​யிலேயே வரம்​ பெற்​றவர்​” என்​று நெகிழ்​ச்​சி​யுடன்​ குறிப்​பிட்​டுள்​ளார்​.

———

நடிகை சமந்​தா​வின் பெயர், படம் மற்​றும் குரலைப் பயன்​படுத்தி உரு​வாக்​கப்​பட்ட டீப்ஃபேக் வீடியோக்​களை நீக்க மும்பை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

செயற்கை நுண்​ணறிவு (ஏ.ஐ) தொழில்​நுட்​பத்​தால் உரு​வாக்​கப்​பட்ட போலி வீடியோ, புகைப்​படம், குரல் மற்​றும் வணிக நோக்​கங்​களுக்​காக தங்​கள் அடை​யாளத்​தைப் பயன்​படுத்​து​வதை எதிர்த்​துத் திரை பிரபலங்​கள் வழக்​குத் தொடுத்து வரு​கின்​றனர். நீதி​மன்​றம் அதைப் பயன்​படுத்த இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது.

இந்​நிலை​யில் நடிகை சமந்​தா​வும் தனது பெயர், புகைப்​படம், குரல் மற்​றும் அவரது ஆளு​மைத் தன்​மை​களைத் தவறாகப் பயன்​படுத்தி வெளி​யிடப்​பட்ட டீப்ஃபேக் மற்​றும் இதர அனு​ம​தி​யற்ற உள்​ளடக்​கங்​களை இணை​யத்​தில் இருந்து உடனடி​யாக நீக்​கு​மாறு மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இவ்​வழக்கு நீதிபதி மாதவ் ஜம்​தார் முன் விசா​ரணைக்கு வந்​தது. அவரது பெயர், படம் மற்​றும் குரலைப் பயன்​படுத்தி வெளி​யிடப்​படும் அனு​ம​தி​யற்ற உள்​ளடக்​கங்​களை வெளி​யிட​வும், தொடர்ந்து பயன்​படுத்​த​வும் நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது.

—–

பிரபல இந்தி நடிகை​யான நுஷ்ரத் பருச்​சா, தமிழில் சேது, சந்​தானம் நடித்த ‘வாலிப ராஜா’ படத்​தில் நடித்​துள்​ளார். இவர் புதிய படம் ஒன்​றின் படப்​பிடிப்​புக்​காக​வும் விடு​முறைக்கா​கவும் இந்​தோ​னேசி​யா​வின் பாலி தீவுக்கு சில நாட்​களுக்கு முன் சென்​றார். அங்கு நடந்த படப்​பிடிப்​பில் கலந்​து​கொண்​ட​போது எதிர்​பா​ராத வித​மாக விபத்​தில் சிக்​கி​னார்.

இதில் அவர் முதுகு தண்​டு​வடத்​தில் எலும்பு முறிவு ஏற்​பட்​டது. இதையடுத்து அங்​குள்ள மருத்​து​வ​மனை ஒன்​றில் உடனடி​யாக அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

நுஷ்ரத் தரப்​பிலிருந்து வெளி​யிடப்​பட்​டுள்ள அறிக்​கை​யில், “அவர் தொடர்ந்து மருத்​து​வக் கண்​காணிப்​பில் உள்​ளார்; அவருக்கு முதுகுத் தண்​டு​வடத்​தில் அறுவை சிகிச்சை செய்​யப்பட இருக்​கிறது. அவரை ஏர் ஆம்​புலன்ஸ் மூலம் மும்​பைக்கு அழைத்து வரு​வதற்​கான ஏற்​பாடுகள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. குணமடைய அவகாசம் தேவைப்​படும்” என்று தெரிவிக்​கப்​பட்டுள்​ளது.

——

கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.

ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் வெளியான முதல் பாகம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெற்றிப் படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, 9 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகியுள்ள இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. முதல் பாகத்தில் நடித்த ஆதி, நிக்கி கல்ராணி, முனீஷ்காந்த், ஆனந்த்ராஜ், டேனியல் ஆனி போப், அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் ஆகியோருடன், இம்முறை சத்யராஜ் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். தீபக் மேனன் மற்றும் பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்ய, திருமலை ராஜன் எடிட்டிங் பணிகளையும், ராஜேஷ் கண்ணன் வசனங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

இறுதிகட்ட பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், பாடல்கள், ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Related posts