20-வது திருமண நாளையொட்டி மீண்டும் திருமணம் செய்ய வேண்டும் என்பது ஜோதிகாவின் நீண்ட நாள் விருப்பமாக இருந்தது. இதுபோன்ற ஒன்றை மீண்டும் உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை. என நடிகர் சூர்யா “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” பட நிகழ்வில் பேசினார்.இந்த தம்பதி கடந்த 11-ம் தேதி தங்களது 20-வது திருமண நாளை கொண்டாடினர்.அதன் ஒரு பகுதியாக இருவரும் மகள், மகன் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.வெளிநாட்டில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, “உங்கள் அனைவரின் அன்புக்கும் மிக்க நன்றி.இதுபோன்ற ஒன்றை மீண்டும் உருவாக்க முடியுமா என்று தெரியவில்லை.இதில் எங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.மிகவும் அழகான தருணமாக இருந்தது. எங்களது திருமண வாழ்க்கைக்கு நீங்கள் அனைவரும் இத்தனை ஆண்டுகளாக அன்பும் மரியாதையும் அளித்து வருகிறீர்கள். அதனால், இந்த மகிழ்ச்சியான தருணத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தோம்” என்றார்.
சூர்யா ஜோதிகாவின் இந்த திருமணம் புதுமை கொண்டதல்ல. அறுபதாம் கல்யாணம் என்று வயதாகிய பின்னர் கொண்டாடுவதை விட இப்போது கொண்டாடுவது நல்லது என்று கருதியதாக சொல்லியிருந்தால் தப்பியிருக்கலாம். சூர்யா இந்து, ஜோதிகா முஸ்லீம் அதனால் என் மதம் உன் மதம் என்றில்லாமல் வேறொரு மதத்தில் போய் திருமணம் செய்துள்ளனர். இவர்களின் மன நோய்க்கு இது மருந்தாகுமா.. இது போல கோமாளிக் கூத்தை இவர்களுடைய ரசிகர்களும் செய்யலாம். சமுதாய வீதியில் எத்தனையோ கழுவேறிகள் இருப்பார்கள், அவர்களும் இதுபோல கூத்தாட தொடங்குவர். குடித்து வெறித்து சாக மேலும் ஒரு புது விழா தமிழருக்கு.. சிவகுமார் என்ற பழமை வாதிக்கு பயந்து வெளிநாடு ஓட வேண்டிய நிலை..
