டி​ராகன்’ படத்​தில் இணை​கிறார் ஆலியா பட்

கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப்​-2’, ‘சலார்’ படங்​களை இயக்​கிய பிர​சாந்த் நீல், அடுத்து இயக்கி வரும் திரைப்​படம், ‘டி​ராகன்’. இதில் ஜூனியர் என்​டிஆர் கதா​நாயக​னாக நடித்து வரு​கிறார்.

அவர் ஜோடி​யாக ருக்​மணி வசந்த் நடிக்​கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்​கும் இந்​தப் படம் தெலுங்​கு, தமிழ், இந்தி உள்பட 5 மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது. இந்​நிலை​யில் இந்தப் படத்தில் இந்தி நடிகர் அனில் கபூர் இணைந்​திருந்​தார். அவர் முக்கிய வேடத்​தில் நடிப்​ப​தாகக் கூறப்​பட்டது.

இதற்கிடையே பிரபல பாலிவுட்​ நடிகர்​களான ஷாகித்​ கபூர்​, ஆலியாபட்​ ஆகியோ​ரும்​ இதில் நடிக்​க இருப்​பதாகக்​ கூறப்படுகிறது. ஆர்​ஆர்​ஆர்​ படத்​தில்​ ஜுனியர் என்​டிஆருடன்​ ஆலி​யா பட்​ ஏற்​கெனவே நடித்​திருந்​தார்​.

——–

மெகா பட்​ஜெட்​டில் உரு​வாகி சமீபத்​தில் வெளி​யான ராம்சரணின் ‘பெத்​தி’, யாஷ் நடித்த ‘டாக்​ஸிக்’ ஆகிய படங்​களில் பெண்​கள் சித்தரிக்​கப்​பட்ட விதம் சமூக ஊடகங்​களில் பெரும் விவாதத்தை ஏற்​படுத்​தி​யது.

பெண்​களைக் கவர்ச்​சிப் பொருளாகச் சித்​தரிப்​பது குறித்து நடிகை டாப்​ஸி​யிடம் கேட்​ட​போது கூறிய​தாவது: இணைய உலகம் எப்​போதும் நிஜ உலகில் தாக்​கத்தை ஏற்​படுத்​து​வ​தில்​லை. மாஸ் வகை​யைச் சார்ந்த பிரம்​மாண்​டத் திரைப்​படங்​கள் சமூக ஊடக உலகின் தாக்​கத்​துக்கு உட்​ப​டாதவை. நீங்​கள் எவ்​வளவு​தான் விமர்​சனங்​களை முன்​வைத்​தா​லும், அதே புகைப்​படத்​தைப் பயன்​படுத்​தி, ஜூம் செய்​து, விசித்​திரமான கோணங்​களில் பல்வேறு வீடியோக்​கள் மற்​றும் படங்​களை உரு​வாக்​கி, அதை வைரலாக்​கு​வதை சமூக ஊடகங்​களில் காண முடி​யும்.

எனவே, சமூக ஊடகங்​களி​லும் அதற்​கென குறிப்​பிட்ட பார்வையாளர் கூட்​டம் இருக்​கிறது. ‘ரசிகர்​கள் அதை விரும்புகிறார்​கள். அதனால் அதைத் தர வேண்​டும்; இல்லையெனில் எப்படிப் பணம் சம்​பா​திப்​பது?’ என்று தயாரிப்பாளர்​கள் நினைக்கிறார்​கள். இதனால் கலை மற்​றும் படைப்​பாற்​றல் பின்னுக்​குத் தள்​ளப்​படு​கின்​றன.

கோவிட் காலத்​துக்கு முன்பு உலகின் சிறந்த படைப்​பு​களுக்கு இணை​யாக வளர்ந்து கொண்​டிருந்​தோம்​. இப்​போது மீண்​டும் பின்​தங்கி விட்​டோம். அனைத்து தயாரிப்​பாளர்​களும் பார்வையாளர்​களையே குறை கூறு​வார்​கள். இங்​கு​தான் நடிகர்களாக நாங்​கள் பதிலளிக்​கத் தவறுகிறோம். இது தனி​யாக வெல்ல முடி​யாத போராட்​டம். பார்​வை​யாளர்​கள்​தான் இந்​தப் போராட்​டத்​தில் வெற்றி பெற உதவ வேண்​டும். இவ்​வாறு டாப்ஸி கூறி​யுள்​ளார்.

Related posts