காமெடி படத்தை தயாரித்து நடிக்கும் நித்யா மேனன்

நடு​வுல கொஞ்​சம் பக்​கத்த காணோம்’, ‘இதற்​குத்​தானே ஆசைப்​பட்​டாய் பால​கு​மா​ரா’ ஆகிய படங்​களைத் தயாரித்த வி.எஸ். ராஜ்கு​மாரின் லியோ விஷன் நிறுவனம் அடுத்து தயாரிக்​கும் படத்​தில் நித்யா மேனன் கதை​யின் நாயகி​யாக நடிக்​கிறார். இப்​படத்​தை, நித்யா மேனனின் கேயுரி புரொடக் ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறு​வன​மும் இணைந்து தயாரிக்​கிறது.

டி கே இயக்​கத்​தில் உரு​வாகும் இன்​னும் பெயரிடப்​ப​டாத இப்​படத்​துக்கு ஏ. சக்​திவேல் ஒளிப்​ப​திவு செய்​கிறார். டார்க் காமெடி​யுடன் கூடிய ஃபேன்​டஸி ஜானரில் உரு​வாகும் இந்​தப் படத்துக்கு இயக்​குநர் விக்ரம் கே. குமார் கிரியேட்​டிவ் புரொடி யூச​ராக பொறுப்​பேற்​றுள்ளார். தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்னடம் மற்​றும் இந்தி மொழிகளில் வெளி​யாக இருக்​கும் இந்த படம் பற்றிய விவரங்​கள் விரை​வில் அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிடப்​படும்​ என படக்​குழு தெரிவித்​துள்​ளது.

——-

நடிகர் விக்ரம் பிரபுவின் 26-வது திரைப்படத்துக்கு ‘சிட்டி ஆஃப் கோல்டு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்கும் இப்படத்தில், இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, தங்கம் கடத்தல் மற்றும் கோவை நகரை மையமாகக் கொண்ட குற்றப் பின்னணி சார்ந்த கதையை பேசுகிறது. யு1 ரெக்கார்ட்ஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், ஷிவாத்மிகா ராஜசேகரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

“நமது கையில் இருக்கும் ஒரு கிராம் தங்கம், ஒருத்தன் உயிரையாவது எடுத்துவிட்டுதான் கைக்கு வந்திருக்கும்” என்ற விக்ரம் பிரபுவின் வசனம் கவனிக்க வைக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்துக்கு கார்த்திக் ஷராஜ் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், வெளியீட்டுத் தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

——

எம்.எஸ். பாஸ்கர் கதை நாயகனாக நடிக்கும் ‘விடியும் காத்திரு’ என்ற க்ரைம் த்ரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இயக்குநர்கள் பாலா மற்றும் மிஷ்கின் ஆகியோருடன் பணியாற்றிய ஆர்.அரவிந்த ராஜன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஃப்ரண்ட்ஸ் புரொடக்சன் ஹவுஸ் சார்பில் பி.எம்.ரவிச்சந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் அம்ஜதா ஷெரின், கோபி அயோத்தி, பேபி ஸ்ரீஜிதா, ராகேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒரு கொலை நடந்த வீட்டிற்குள் விசாரணைக்காகச் செல்லும் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு அங்கிருக்கும் அமானுஷ்ய சம்பவங்களால் ஏற்படும் அனுபவங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பெரிய சாவி துவாரத்தின் வழியே பயத்துடன் பார்க்கும் எம்.எஸ்.பாஸ்கரின் முகமும், கதவில் இடம்பெற்றுள்ள “யூ ஆர் நெக்ஸ்ட்” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளன.

சி.சத்யா இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஜி.தாமோதரன் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Related posts