ரசிகர்​களைத் திருப்திப்படுத்தவே மிகையான வசூல் விவரங்கள்

சினி​மா​வில் வசூல் விவரங்​கள் கதா​நாயகர்​களைப் பெருமைப்படுத்த மிகைப்​படுத்​திக் காட்​டப்​படு​கிறது என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் அளித்​துள்ள பேட்​டி​யில், “சினிமா வசூலை கோடிகளில் எகிற வைத்​துக் காட்​டும் போக்கு ‘பாகுபலி’க்​குப் பிறகு​ தான் தீவிரமடைந்​தது. அன்​றி​லிருந்து பிரம்​மாண்ட எண்களைக் காட்ட வேண்​டிய கட்​டா​யம் தயாரிப்​பாளர்​களுக்கு ஏற்​பட்​டுள்​ளது. ஒரு படத்​தின் உண்​மை​யான பாக்ஸ் ஆபீஸ் வசூல் தயாரிப்பாள​ருக்கு மட்​டுமே தெரி​யும்.

இவ்​வளவு வசூல் செய்​துள்​ளது என்று மிகைப்​படுத்​தப்​பட்ட போஸ்டர்​கள் வெளி​யிடப்​படு​வது, சம்​பந்​தப்​பட்ட ஹீரோக்​களை பெரு​மைப்​படுத்​த​வும், ரசிகர்​களின் திருப்​திக்காக மட்​டும்​தான்” என்​று தெரி​வித்​துள்​ளார்.

——–

‘பாகுபலி’ திரைப்​படத் தொடரின் பிரம்​மாண்​ட​மான உருவாக்கத்தை​யும், திரைக்​குப் பின்​னால் நடந்த உழைப்​பை​யும் விவரிக்​கும் வகை​யில் ‘பாகுபலி: தி டார்ச்​பியரர்’ என்ற ஆவணத் தொடர் உருவாக்​கப்​பட்​டுள்​ளது.

நெட்ஃபிளிக்ஸ் தளத்​தில் பிரத்​யேக​மாக வெளி​யிடப்​பட்​டுள்ள இத்தொடரின் புரமோஷன் நிகழ்ச்​சி​யில் பிர​பாஸ், ராணா கலந்துகொண்​டனர். பிர​பாஸ் பேசும்​போது, “இத்​தாலி​யில் கூட மக்​கள் என்​னைப் பார்த்து என் பெயரைச் சொல்லி அழைத்திருக்கிறார்கள். பெரு​வுக்கு சென்​ற​போதும், அங்​கிருந்த குழந்​தைகள் ‘பாகுபலி’யை எவ்​வளவு விரும்​பு​கிறோம் என்று கூறினார்​கள்.

‘பாகுபலி’க்​குப் பிறகு ஏற்​பட்ட தாக்​கம் சொல்ல முடி​யாத அளவுக்கு இருந்​தது. நான் ஒரு புதிய நாட்​டில் விழித்​தெழுந்​தா​லும், அங்​கும் மக்​கள் என்னை அடை​யாளம் கண்​டு​கொள்​கிறார்​கள். அப்​போது ராஜமவுலி சாருக்கு போன் செய்​து, ‘என்னை இந்த ஜென்​மத்​தில் சுதந்​திர​மாகப் பயணம் செய்ய விட மாட்​டீர்​களா ?” என்று நகைச்​ சுவை​யாகக் கேட்​பேன்.

முன்​பெல்​லாம் ஓய்​வாக இருக்க மும்பை அல்​லது டெல்லி செல்வோம். இப்​போது உலகின் எந்த நாட்​டுக்​குச் சென்​றாலும்​ யாராவது ஒரு​வர்​ வந்​து ‘பாகுபலி’ என்​று அழைத்​து​விடு​கிறார்​கள்​” என்கிறார்.

——-

அறி​முக இயக்​குநர் மகேஷ் ராஜேந்​திரன் இயக்​கத்​தில் பவிஷ் நாராயணன் ஹீரோவாக நடித்​துள்ள படம், ‘லவ் ஓ லவ்’. நாக துர்கா, செல்​வ​ராகவன், கே.எஸ்​.ரவிக்​கு​மார், வனிதா விஜயகு​மார் மற்​றும் பலர் நடித்​துள்​ளனர்.

ஸினிமா மீடியா சார்​பில் தினேஷ் ராஜ், கிரியேட்​டிவ் என்டர்டெயினர்ஸ் சார்​பில் ஜி.தனஞ்​ஜெயன் இணைந்து உருவாக்கி​யுள்ள இப்​படத்​தின் டிரெய்​லர் மற்​றும் பாடல்​கள் வெளியீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்குழுவினருடன் கலைப்​புலி தாணு, சித்ரா லட்​சுமணன், இயக்குநர்​கள் சசி, ஆர்​.​வி. உதயகு​மார் உள்பட பலர் கலந்துகொண்​டனர்.

விழா​வில் பெப்சி தலை​வர் ஆர்​.கே.செல்​வ​மணி பேசும்​போது, “‘லவ் ஓ லவ்’ என்ற பெயருக்கு ஒரு சிறப்பு இருக்​கிறது. இந்த கதையை ஒன்​றரை மணி நேரம் சொன்​னார் இயக்​குநர். கேட்​கும் போது படத்தை நேரில் பார்ப்​பது போல் இருந்​தது. தயாரிப்​பாளர் தனஞ்​செயன் வாயால் நல்ல பெயர் எடுப்​பது கஷ்டம். அதை இந்த படத்​தின் இயக்​குநர் மகேஷ் வாங்​கி​யிருக்​கிறார். அன்று படம் வெளி​யா​வது தயாரிப்​பாளர் கட்​டுப்​பாட்​டில் இருந்​தது, பிறகு நடிகரிடம் இருந்​தது.

இப்​போது ஓடிடி-​யிடம் இருக்​கிறது. 200 படங்​களை இலவச​மாகக் கொடுத்​தால் கூட ஓடிடி-​யில் வாங்க முடி​யாத சூழ்​நிலை இருக்கிறது. வாரந்​தோறும் 50 படங்​களாவது ஓடிடி​-யில் வெளியானால் நன்​றாக இருக்​கும். ரஜினி​யிடம் இருக்​கும் தன்னம்பிக்கை முதல் படத்​திலேயே தனுஷுக்கு இருந்​தது. அதே நம்​பிக்​கையை இந்​தப் படத்​தின் ஹீரோ பவிஷிடம் பார்க்க முடிகிறது” என்​றார்.

Related posts