செப்​.10-ல் வெளியாகிறது ‘சர்தார் 2’

கார்த்​தி, 2 வேடங்​களில் நடித்து வரவேற்​பைப் பெற்ற படம், ‘சர்தார்’.

பி.எஸ்​.மித்​ரன் இயக்​கிய இப்​படத்​தின் அடுத்த பாகம், ‘சர்​தார் 2’ என்ற பெயரில் உரு​வாகி​யுள்​ளது. இதில் மாளவிகா மோக​னன், ஆஷிகா ரங்​க​நாத், ரஜிஷா விஜயன், எஸ்​.ஜே.சூர்​யா, யோகி பாபு உள்பட பலர் நடித்​துள்​ளனர். இதன் படப்​பிடிப்பு எப்​போதோ முடிவடைந்​து​விட்​டது.

இந்​நிலை​யில் இப்​படம் செப்​.10-ல் வெளி​யா​வ​தாகப் படக்​குழு அறிவித்​துள்​ளது. இப்​படம் தெலுங்​கிலும் வெளி​யாகிறது. செப்​.11-ல் விஜய தேவர​கொண்​டா, ராஷ்மிகா நடித்​துள்ள ‘ரண​பாலி’ படம் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளி​யா​வ​தால் பாக்ஸ் ஆபிஸ் போட்டி இருக்​கும் என்​கிறார்​கள்.

——-

விராட் கர்​ணா, நபா நடேஷ், ஐஸ்​வர்யா மேனன், மகேஷ் மஞ்ச்​ரேகர் உள்பட பலர் நடித்துள்ள திரைப்​படம், ‘நாகபந்​தம்’.

அபிஷேக் நாமா எழுதி இயக்​கி​யுள்ள இப்​படம், ஜூலை 3ம் தேதி தமிழ், தெலுங்​கு, இந்​தி, கன்​னடம், மலை​யாள மொழிகளில் வெளியாகிறது. இந்​தப் படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்து கொண்டனர்.

நடிகை நபா நடேஷ் பேசும்​போது, “இது சாதா​ரண​மான திரைப்​படம் அல்ல. நமது வரலாறு, மர்​மம், சாகசம், ஆக் ஷன், த்ரில்​லர் மற்​றும் உணர்​வுப்​பூர்​வ​மான தருணங்​கள் அனைத்​தும் இணைந்த பிரம்​மாண்​ட​மான திரை அனுபவம். இதில் பணி​யாற்​றியது சிறப்பான அனுபவ​மாக இருந்​தது. படத்​தின் கதை​யும், உருவாக்கப்​பட்ட உலக​மும் பார்​வை​யாளர்​களுக்கு புது​மை​யான அனுபவத்தை வழங்​கும். டிரெய்​லருக்கு கிடைத்​துள்ள வரவேற்பு மகிழ்ச்​சியை தந்​திருக்​கிறது” என்​றார்.

நாயகன் விராட் கர்ணா பேசும்​போது, “இந்​தப் படம் இந்​திய கலாச்சா​ரம், பாரம்​பரி​யம், தைரி​யம், கோயில்​களின் மரபு, நமது தொன்​மை​யான நாகரீகத்​தின் பல அம்​சங்​களை பேசுகிறது. நம் நாட்​டின் வரலாறு மற்​றும் ஆன்​மிக மரபு​களை புதிய தலை​முறைக்கு கொண்டு செல்​லும் முயற்​சி​யாக இந்​தப் படம் இருக்கும்” என்​றார்.

Related posts