இந்தப் பாடல் என்னால் எழுதப்பட்டது. இதற்கான இசை அமைப்பு வடிவமும் என்னாலேயே எழுதப்பட்டது. சிறந்த இசை ரசிகனாக இருந்தும் என்னால் அந்தத் துறையில் சிகரங்களை தொட முடியவில்லை. அன்று இசை படிப்பது நமது ஊரில் கேலிக்குரிய விடயமாக பார்க்கப்பட்டது. ஆனால் நாம் களைத்துவிடக் கூடாது. குடியேற்றவாதிகள் செய்த 400 வருடக் கொடுமையே அந்தக் கேலி. நமது இனத்தின் டி.என்.ஏ மரபணு சங்கிலியை நாசமாக்கியது நம்மை கீழ்மைப்படுத்தி அடிமைகளாக வைத்திருந்த குடியேற்ற ஆட்சியே. எதை எடுத்தாலும் ஆதரரிக்காத குறை சொல்லும் நிலைக்கு ஒட்டு மொத்த இனத்தையும் தள்ளியதும் அதுவே.
அந்த நோயை இன்றுவரை கண்டறிந்த அறிஞர் நம்மிடையே இல்லை. அதை மாற்றும் கல்வியும் நம்மிடையே இல்லை. திக்குத் தெரியாத காட்டில் நிற்கின்றோம். இன்றோ அதை மாற்றுவது ஒரு பெரும் போராக இருக்கிறது. என்னைப் போன்ற தன்னம்பிக்கையாளர் இதை உடைக்க போராடுகிறோம். அதனால் பட்ட காயங்கள் பல..
ஆனால் இன்றோ என் மனதில் இருந்த கனவுகளுக்கெல்லாம் செயல் வடிவம் கொடுக்க ஏ.ஐ. மாபெரும் கதவுகளை திறந்திருக்கிறது. புதுமை மனதில் சிரிக்கிறது. பழைய டிஎன்ஏ அறுந்து சக்கரமாக சுழன்று சட்டென புது வடிவமும் பெற்றது. அதில் ஓரங்கமே இப்பாடல். இலங்கையில் திரைப்படத்தை உருவாக்க அரும்பாடுபட்டு, இலக்கை தொட முடியாது போன அருமை மனிதர்களுக்கு, அவர்கள் பூமியில் இருந்தாலும் ஆகாயத்தில் இருந்தாலும் இனி ஆறுதல் கிடைக்கும். தோல்வியுடன் விடைபெற்ற ஆத்மாக்கள் உள்ளங்களில் மகிழ்ச்சி வெள்ளம் பாய்ச்சும் இந்தப்பாடல். இனி எல்லோர் ஆசீர்வாதங்களும் நமக்கு கிடைக்கும்.
எப்படி மாபெரும் மேதைகளின் உள்ளமானது மகத்தான இசையைக் கற்பனை செய்கிறது. அதை மக்களுக்கு எப்படி அள்ளி வழங்குகிறது. அது அவர்களுக்கு மட்டும்தான் சொந்தமா.. அதை ரசிக்கும் நாம் என்றுமே ரசிகர்கள் மட்டுமா.. இல்லை, அந்த எண்ணமே அடிப்படைத் தவறு, நம்மால் முடியும் இன்று வரை காத்திருந்தேன். இப்போது இதுபோல நூறு பாடல்களை இசையமைத்துவிட்டேன். எல்லாமே முத்தான பாடல்கள். எங்கள் வீட்டில் இப்போது காலை முதல் மாலை வரை எனது பாடல்களே ஒலிக்கின்றன.
இதோ நீங்கள் காணும் இந்தப் பாடல்களுக்கான காட்சிகள், படத்தொகுப்பு எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டும். நேரமில்லா வாழ்வில் இன்னொருவரை இணைத்து பயணிக்க முடியாது. நமது இலட்சியங்கள் வேறு, இலக்குகள் வேறு எல்லோருடனும் இணைந்து பயணிக்க முடியவில்லை. எப்போதுமே நமது இலக்கை தொட வேண்டுமானால் அனைத்தையும் உருவாக்க நாமே தயாராக வேண்டும். இதற்காக சுமார் 27 வருடங்கள் தொழில் நுட்ப உலகில் ஓய்வின்றி பணியாற்றினேன். அதை ஆதாரமாக வைத்து ஏ.ஐ வரவை அதோடு இணைத்தேன். எத்தனை உயர் கல்விக்கூடங்களில் கற்றேன் என்பது எனது நண்பர்களுக்கே தெரியாது.
கால் நூற்றாண்டுகளுக்கு மேல் கண் உறங்காமல் இருக்கிறேனே ஏன்.. எனக்காக அல்ல.. உங்களுக்காகத்தான். கறுப்பு கோட் அணிந்த சட்ட நிபுணர்களும், நீதிபதிகளுமே ஆள முடியுமென்று தவறாக நினைத்து, தவறான பாதையில் வந்துவிட்டோம். கறுப்பு சட்டை இருள் அல்ல இனி வெளிச்சமே உலகை ஆளும், அதை நாம் இனிமேலாவது புரிய வேண்டும். அதுதான் கிரியேட்டிவ் என்ற மாபெரும் வெளிச்சம். அதுதான் யாரும் இதுவரை செய்யாத கற்பனை. அதுதான் இனி உலகை ஆளும். உலகத்தை சந்தையாக்கி உன்னதம் பெற கிரியேட்டிவ் இருந்தால் போதும், ஏ.ஐ. கை தரும்.
இப்படியொரு நாள் வருமா.. வரும் காத்திருந்தேன்.. மனம் தளரவில்லை, பயிற்சியை கைவிடவில்லை.
ஐம்பது வருடங்களுக்கு மேலாக எழுதி வரும் எனது எழுத்தாற்றலை என்றுமே மழுங்க விடாது தொடர்ந்து கூர்மைப்படுத்தி எழுதி வந்தேன். எனது எழுத்தாற்றலே வெற்றி பெற்றுக்காட்டிய உலகச் செய்திகள். கடந்த மே மாதம் 100 மில்லியனை தாண்டியது. சரித்திரம் படைத்தது இது சிலருக்கு மட்டுமே தெரியும். அது முடிவல்ல மேலும் உண்டு.
கிறிஸ்டோபர் நோலன் போன்றவர்களின் கிங்கொங், ஜேம்ஸ் கமரோனின் அவற்றார் காட்சிகளை எல்லாம் நானே உருவாக்கி உலகச் செய்திகளுடன் இணைத்தேன். சுனாமியும், கிங்கொங்கும் இணைந்து ஈரான் திரை நகர் தெகிரானுக்குள் நுழைந்தால் எப்படியிருக்கும். என்னால் செய்யப்பட்ட காணொளியை ரசித்து விமர்சிக்கவே நம்மிடம் ஆட்கள் இல்லாமல் கடந்து போனது.
என்னிடமுள்ள எழுத்தாற்றலால் இசையையும், காட்சிகளையும் எழுதினேன். இதை உருவாக்கினேன். இதுபோல திரைப்படத்தை உருவாக்கும் புதிய எழுத்தும் நிறைவடைகிறது. கதை எழுதிவிட்டேன், சீனோகிராபி என்கின்ற மாபெரும் காட்சி எழுத்தை அதாவது திரைக்கதையை எப்படி வடிவம் கொடுத்து முடிப்பது, அது ஒரு புதிய எழுத்து வடிவம் எழுதுகிறேன். ஏ.ஐ புறொம்ற் எழுதும் இன்றைய அமெரிக்கரை கடந்து போகும் ஆற்றல் தமிழுக்கு உண்டு என்பதால் அனைத்தையும் தமிழிலேயே எழுதி தமிழின் ஆளுமை என்ற மாபெரும் சூப்ப பவரை ஏ.ஐக்கு அறிமுகம் செய்தேன்.
தமிழை சற்ஜிபிரியில் ஆங்கிலமாக்கி கொடுப்பதால் வரும் அவுட் புட்டில் ஜீவன் இருக்காது. நேரடி தமிழில் உருவாக்கும் காட்சி அதைவிட நூறு மடங்கு பவர் உள்ளது. அதை நான் அனுபவத்தில் கண்டேன்.
இதற்காகவே 100 பேரை நடிக்க வைத்து, கிறீஸ் என்ற மேற்கத்தைய இசை நாடக வடிவத்தை 2006 லேயே கொண்டு வந்தேன். கேர்னிங் கொங்கிரஸ் சென்டர் பிரமாண்ட அரங்கு 1200 போர் நிறைந்த காட்சி, இங்கிலாந்து குறொய்டன் அரங்கு ஆகிய பெரும் அரங்கங்களில் மேடையேற்றினேன். அது ஒரு பயிற்சிப் பட்டறையே.. வந்து கொண்டிருக்கிறது ஏ.ஐ என்பது அன்று தெரியவில்லை. ஆனால் காலம் என்னை வழி நடத்துவது மட்டும் தெரிந்தது. நான் காலமாம் பேரருளின் ஒரு பணியாளன் மட்டுமே, என்பதும் எனது கையில் எதுவும் இல்லை என்பதும் தெரிந்தது. ஆணவம் அழிந்து கரைந்தும் போனது, குழந்தை ஆனேன்.
நமக்கான கலை, நமது, நமது என்று யாரைப் பார்தாலும் ஏதோ ஒன்றை இழந்தது போல கோப்படுகிறோம். அதற்கான ஒன்றை உருவாக்கினால் ஏன் அதை ஒன்றுகூடி வீழ்த்துகிறோம். அது தவறல்ல, அவர்கள் குற்றவளிகளும் அல்ல. குடியேற்றவாதிகளினால் உருவாக்கப்பட்ட மரபணு அந்த நேரம் விழித்தெழுந்து நம்மை வீழ்த்தும். அதை மாற்றியமைக்கும் உளவியல் மானுட போராட்டமே நமது முதல் போராட்டமாக இருந்திருக்க வேண்டும். இந்த உண்மை இன்னமும் நம்மால் விளங்கிக் கொள்ளப்படவில்லை. வீண் பகை வளர்க்கிறோம், பிடிவாதம் பிடிக்கிறோம். ஆனாலும் இவை எல்லாவற்றையும் ஏ.ஐ யுகம் கடந்து போகும். அந்த நம்பிக்கை மனதில் இருக்கிறது. அதற்கு உதாரணமே இந்தப் பாடலாகும்.
இந்தப் பாடலும், இதை தனி மனிதனாக உருவாக்கிய எனது முயற்சியும் கலந்து உங்களுக்கு புது நம்பிக்கை தரும். இது எனது பல்வேறுபட்ட முயற்சிகளில் ஒன்று மட்டுமே. இதுவரை நாம் கண்ட ஹொலிவூட் திரைப்படங்களின் அற்புத காட்சிகளை எல்லாம் அவர்கள் ஏ.ஐயை வைத்துத்தான் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த இரகசியத்தை மறைத்து நம்மை ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள். இப்போது அதனால் பிழைத்து முடிந்த பின் அதையே விற்கவும் வந்திருக்கிறார்கள். ஆனால் இன்றாவது அது நம் கைக்கு வந்ததே அது போதும். தமிழ் கடைசியில் ஓடினாலும் நிறைவில் அதுவே வெற்றி பெறும் என்பதை காலம் நிலை நிறுத்தும். அறிவு ஆயுதம் வாள் போன்றது. அதை கடைசியில் எடுப்பவனே வெற்றி பெறுகிறான். அன்று அதற்கு கை கொடுத்தது இணையம், இப்போது மேலும் சிறப்பு தர வந்துள்ளது ஏ.ஐ.
நமது ஈழத் திரைப்படங்களுக்கு வர்த்தகம் இல்லை. தமிழகத் திரைப்படங்களிலும் 100:99 படங்களுக்கு வர்த்தகம் இல்லைத்தான். இதற்கு காரணங்கள் பல அதற்கு முக்கிய காரணம் நம்மிடம் யுனிக்கான சிந்தனை இல்லை என்பதும், அது அகபுற காரணிகளாலும், கல்வி, சமூக வாழ்வு, ஒடுக்குமுறை, ஏற்றத்தாழ்வுகள், அதிகாரம் என்பவற்றால் தலையெடுக்க முடியவில்லை. ஆதரவற்ற நமது இருள் மனங்களே யுனிக்;கான புதிய விதைகளை எல்லாம் முனை மழுங்கச் செய்தது. ஒரு சிலர் வாழ மட்டுமே நமது வாழ்வு பாதை போட்டுள்ளது. அது எல்லோருக்குமான பரந்த மனப்பாதையல்ல. அதை மாற்றி எல்லோரும் போகும் புதிய விரைவுச்சாலைகளை உருவாக்க இதுவே தருணம்.
எல்லோரும் பயணிக்காத வழி பாழடைந்த வழியாகிவிடும். இதை நாம் இனி மறுக்க முடியாது. இருப்பினும் நடந்தவை முடிந்து போனவை. அவற்றை மாடுகள் போல படுத்திருந்து அசை போட முடியாது. புதிய காலம், புதிய சூழல் இனி வெற்றி நம் கையில் எழுந்து நிற்போம். என்னருமை இளைஞர்களே எழுந்து வாருங்கள். காலம் கனிந்து நிற்கிறது. அனைவருடைய ஆசீர்வாதங்களும் நமக்கு இப்போது இருக்கிறது. நல்லதை செய்வோம். வெறுமனே நமது தமிழர் நமது நாடு என்று குறுகிவிடாதீர்கள். நாம் எது செய்கிறோமோ அது இந்த உலக மக்களுக்காக செய்யப்பட வேண்டும். நாம் தனியே தமிழருக்காக மட்டுமல்ல இந்த உலகத்திற்காகவே அதிகம் பாடுபட வேண்டும். ஒன்றே உலகம் என்ற தமிழினத்தின் கடமை அது, நமது பரந்த மனமே வெற்றி தரும். முதலில் அதை கண்டு பிடிக்க வேண்டும்.
ஒரு பாடலும் அதற்கான எழுத்தும் இப்படியாக ஊற்றெடுத்து வருகிறது.
துள்ளி வரும் நினைவுகளே என்ற இந்தப்பாடல் தரும் மன எழுத்து இதுவாகும்.
அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்..
கி.செ.துரை 05.06.2026
