முதல்​வர் விஜய்யை சந்​தித்து வாழ்த்திய ஆர்ஜே பாலாஜி

தவெக தலை​வர் விஜய் முதல்​வ​ரான பிறகு திரை பிரபலங்​கள் அவரை சந்​தித்து வாழ்த்​துக் கூறி வரு​கின்​றனர். கமல்​ ஹாசன், லோகேஷ் கனக​ராஜ், ஸ்ரீமன், விஜய் ஆண்​டனி உள்​ளிட்​டோர் சந்தித்​திருந்த நிலை​யில் நடிகரும் இயக்​குநரு​மான ஆர்ஜே பாலாஜியும் அவரைச் சந்​தித்து வாழ்த்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “கருப்பு படத்துக்கான அனைத்​தை​யும் தொடங்கி வைத்த அந்த மனிதருடன் நிற்கிறேன். இப்​போது அவரைத் தமிழ்​நாட்​டின் முதலமைச் சராகச் சந்​திப்​பது, ஏதோ கனவு போல உணர்​கிறேன். அதே அன்​பு, அதே அரவணைப்​பு, அதே கனிவு, அதே நிதானம்” என குறிப்​பிட்​டுள்​ளார்.

ஆர்ஜே பாலாஜி இயக்​கத்​தில் சூர்யா நடித்​துள்ள ‘கருப்​பு’ படம் கடந்த மாதம் 14ம் தேதி வெளி​யாகி வரவேற்​பைப் பெற்று வருகிறது. இது​வரை உலகள​வில் ரூ.300 கோடியை கடந்து வசூலித்து வரு​கிறது. இப்​படத்​தின் கதையை முதலில் விஜய்​யிடம் தான் ஆர்.ஜே பாலாஜி கூறி​யிருந்​தார். சில காரணங்​களால் அது நடக்​க​வில்​லை.

——-

கவுதம் ராம் கார்த்​திக் கதா​நாயக​னாக நடித்​துள்ள படம், ‘ப்​ளடி பாலிடிக்​ஸ்’. நாயகி​யாக அஞ்​சனா நேத்​ருன் நடித்​துள்​ளார்.

செல்​வ​ராகவன், பி.​வாசு, ஏ.வெங்​கடேஷ், வ.ஐ.ச. ஜெய​ பாலன், மாறன், இந்​து​ம​தி, ஆதித்யா கதிர், பாக்​கி​யம் சங்​கர் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். தீனா ராகவன் இயக்​கும் இப்​படத்தை ‘டா​டா’ இயக்​குநர் கணேஷ் கே.​பாபு, தயாரித்​துள்​ளார். சஞ்​சய் முத்​துக்​கு​மார் வி, இணை தயாரிப்பு செய்​துள்​ளார்.

ராஜு முரு​கன் வசனம் எழு​தி​ உள்ள இப்​படம் வலு​வான அரசி​யல் கதைக் ​களத்​தில் உரு​வாகி​யுள்​ளது. இதன் படப்​பிடிப்பு இப்​போது நிறைவடைந்​துள்​ளது. போஸ்ட் புரொடக் ஷன் பணி​கள் நடைபெற்று வரு​கின்றன என்று படக்​குழு தெரி​வித்​துள்​ள

—–

சந்​தோஷ் இராவணன் இயக்​கத்​தில் உரு​வாகி​யுள்ள திரைப்​படம் ‘அந்​தரன்’. பிரஜின், இவானா வருண், அதிரன், பத்​மன், அனுபமா குமார், மு.கி.​ சாம்​ப சிவம், ரமேஷ் பாபு உள்பட பலர் நடித்ததுள்ளனர்.

‘அட​வி’, ‘மனிதர்​கள்’ படங்​களைத் தொடர்ந்து ஸ்ரீ கிரிஷ் பிக்​சர்ஸ் சார்​பில் மு.கி.​சாம்​ப சிவம் தயாரிக்​கிறார். ஹரி எஸ்​.ஆர். இசையமைக்​கும் இப்​படத்​துக்கு கிஷோர் ராமச் ​சந்​திரன் ஒளிப்​பதிவு செய்​துள்​ளார். இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் தயாரிப்​பாளர் சி.​வி.கு​மார் உள்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

படம் பற்றி சந்​தோஷ் இராவணன் கூறும்​போது, “இப்​படத்​தின் கதையைத் தயாரிப்​பாளர் சாம்​பசிவத்​துக்கு மின்​னஞ்​சல் மூலம் அனுப்​பினேன். 2 நாட்​களில் ‘கதை நன்​றாக இருக்​கிறது. ஆனால் இப்​போது என்​னால் தயாரிக்க இயலாது’ என்​றார். பிறகு ஆறு மாதம் கழித்து மீண்​டும் என்னை அழைத்​து, தனது நண்​பர் ராஜேந்திர பிர​சாத்​துக்கு கதை சொல்​லச் சொன்​னார். சொன்னேன். அவருக்​கும் பிடித்​திருந்​தது. அவர் கொடுத்த ஆதரவின் காரண​மாகத்​தான் இப்​படத்​தின் பணி​கள் தொடங்கின. ‘அந்​தரன்’ என்​றால் ஒரு வேடன். மறைந்​திருந்து தாக்குபவன் என்று பொருள்.

இத்​துடன் நம்​முடைய தினசரி வாழ்​வில் பல விஷ​யங்​களைக் கடந்து செல்​கிறோம். அதன் மூல​மாக ஏதேனும் மோச​மான விளைவு​கள் ஏற்​பட்ட பிறகு ​தான் அதன் தீவிரத்​தைப் பார்க்கிறோம். அப்​படிப்​பட்ட ஒரு விஷ​யத்தை மைய​மாகக் கொண்​டது​ தான் இப்​படம். அதைப் பற்றி இப்​போது விரி​வாகச் சொல்ல இயலாது. நீதி​மன்​றத்​தில் தற்​போது நடை​பெற்று வரும் ஒரு வழக்​கைத் தழு​வியது. படம் வெளி​யான பிறகு இதைப்​ பற்​றிச் சொல்​கிறேன். இது வழக்​க​மான படமாக இருக்​காது” என்​றார்.

Related posts