கொரிய சுற்றுலா​வின் கவுரவ தூதரானார் பிரியங்கா மோகன்

கொரிய நாட்​டின் சுற்​றுலாத் துறைக்​கான கவுரவ தூத​ராக நடிகை பிரி​யங்கா மோகன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

நெட்​பிளிக்​ஸில் வெளி​யான ‘மேட் இன் கொரி​யா’ திரைப்​படத்​தில் கொரி​யா​வில் பணிபுரி​யும் தன்​னம்​பிக்கை மிக்​கப் பெண்​ணாக பிரி​யங்கா மோகன் நடித்​திருந்​தார். இந்​திய மற்​றும் கொரிய நாட்டு ரசிகர்​களிடம் இப்​படம் வரவேற்​பைப் பெற்​றது. இந்நிலையில் கொரிய நாட்டு சுற்​றுலாத்​துறை​யின் கவுரவ தூதராக அவர் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இதற்​காக கொரிய சுற்​றுலா அமைப்​புக்கு அவர் நன்றி தெரிவித்துள்​ளார். நடிகை பிரி​யங்கா மோகன், தற்​போது கவின் நடிப்​பில் தயா​ராகி வரும் பெயரிடப்​ப​டாத படத்​தி​லும், வெற்​றி​மாறனின் ‘அரசன்’ படத்​தில் சிலம்​பரசன் ஜோடி​யாக​வும் மாரி செல்​வ​ ராஜ் இயக்​கும் ‘மஞ்​சணத்​தி’ படத்​தி​லும்​ நடித்​து வரு​கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

——-

தயாள் பத்​ம​நாபன் இயக்​கி​யுள்ள திரைப்​படம், ‘லட்​சுமி​காந்​தன் கொலை வழக்​கு’. 2 எம் சினி​மாஸ், டி பிக்​சர்ஸ் சார்​பில் கே.வி.சபரீஷ் தயாரிக்​கும் இதில் வெற்​றி, பிரி​கி​டா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், அருவி மதன், கவிதா பார​தி, லொள்ளு சபா மாறன், இளவரசு உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர்.

திரைக்​கதை, வசனத்தை கவிதா பார​தி​யும் தயாள் பத்​ம​நாபனும் இணைந்து எழு​தி​யுள்​ளனர். ஜூன் 25-ல் வெளி​யாகும் இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. அ​தில், கதா​பாத்​திர அறி​முகம் பிரத்​தி​யேக​மாகத் திரை​யிடப்​பட்​டது. படக்​குழு​வினர் கலந்​து​ கொண்​டனர்.

இயக்​குநர் தயாள் பத்​ம​நாபன் கூறும்​போது,” உண்​மைச் சம்பவங்களை அடிப்​படை​யாகக் கொண்ட படம் இது. 1972ம் ஆண்டை பின்​னணி​யாகக் கொண்டு உரு​வாக்​கப் பட்​டுள்​ளது. மரண தண்​டனைக் கைதி​யின் வாழ்க்​கை​யில் ஓர் இரவை மையமாகக் கொண்​டு, அவன் கடந்த காலத்தை மீள்​பார்க்​கும் கதை​யாக இது அமைந்​துள்​ளது” என்​றார்.

—–

சல்​மான் கானின் மான் வேட்டை வழக்கை மைய​மாக வைத்து உரு​வாகும் ‘காலா ஹிரன்’ படத்தை நிறுத்​தக் கோரி அப்​படத்​தின் தயாரிப்​பாள​ருக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது.

கடந்த 1998-ம் ஆண்டு ராஜஸ்​தான் மாநிலம் ஜோத்​பூரில் 2 அரியவகை மான்​களை, சல்​மான் கான் வேட்​டை​யாடிய​தாகத் தொடரப்பட்ட வழக்​கில் அவருக்கு 5 ஆண்டு சிறைடத தண்​டனை விதிக்​கப்​பட்​டது. இத்​தண்​டனைக்கு எதி​ராக மேல்​முறை​யீடு செய்யப் பட்டு வழக்கு நடந்து வரு​கிறது. சர்ச்​சைக்​குரிய இச்சம்பவத்​தின் பின்​னணி​யில் ‘காலா ஹிரன்’ என்ற பெயரில் திரைப்​படம் உரு​வாகிறது. இப்​படத்​தின் அதி​காரப்​பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்​டர் சமீபத்​தில் வெளி​யிடப்​பட்​டது. இதன் டீஸர் ஜூன் 20-ல் வெளி​யாக இருக்​கிறது.

இந்த வேட்டை விவ​காரத்​தால் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து சல்​மான் கானுக்கு கொலை மிரட்​டல்​கள் வந்​து​ கொண்​டிருக்​கும் சூழ்​நிலை​யில், இந்​தப் ​படம் குறித்த அறி​விப்பு பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. இந்​நிலை​யில் இப்​படத்​தின் தயாரிப்பு மற்​றும் விளம்​பரப் பணி​களை உடனடி​யாக நிறுத்​து​மாறு சல்மான் கான் தரப்​பில் இருந்து ‘காலா ஹிரன்’ தயாரிப்​பாள​ருக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. “இந்​தப்​படம் சல்​மான் கானின் நற்​பெயரைக் கெடுக்​கும் வகை​யிலும், அவரது தனிப்​பட்ட உரிமை​களை மீறும் வகை​யிலும் உரு​வாக்​கப்​படு​கிறது” என நோட்​டீஸில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

Related posts