ஆற்றில் குதித்து கே.ராஜன் தற்கொலை – நடந்தது என்ன?

திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை செய்ய 15 கோடி ரூபா கடன் சுமையே காரணம் என்று விசாரணைகள் தெரிவிக்கின்றன. இவர் கடன் தொல்லையால் ஐந்து வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அவருடைய குடும்பத்தினர் இவர் கடன்பட்டு பலருக்கு கொடுத்ததாகவும், அவர்கள் ஏமாற்றிவிட்டதால் மனமுடைந்து மாரடைப்பும் வந்ததாக தெரிவிக்கிறார்கள். யூருப்பில் நடிகர்களை வறுத்தெடுத்த ராஜன் பயில்வான் ரங்கநாதனுடன் வாய் மூலம் மோதலும் செய்துள்ளார். தமிழக சினிமா யூருப் எதிர்மறை கருத்தாளர்களான கே.ராஜன், பயில்வான், காந்தாராஜ் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரமாக ஒளி காட்டியவர். இவர் பல காணொளிகளில் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறி வந்தவர். அவர் கொடுத்த கடனை திருப்பி வாங்கித்தர வேண்டுமென இவர் மகன் கேட்டுள்ளார். தற்கொலை குறித்து போலீஸ் தரப்​பில் கூறிய​தாவது: தயாரிப்​பாளர் கே.​ராஜனுக்கு மனை​வி, 3 மகன், ஒரு மகள் உள்​ளனர். அவர்​கள் சென்னை தண்​டை​யார்​பேட்​டை​யில் வசிக்​கின்​றனர். அவர்​களு​டன் ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக சமீப​கால​மாக ராஜன் மட்​டும் நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள ஓட்​டலில் அறை எடுத்து தங்கி இருந்​துள்​ளார். குடும்ப பிரச்​சினை​யா? நேற்று காரில் வேளச்​சேரி சென்​று​விட்டு திரும்​பும் வழி​யில் அடை​யாறு திரு.​வி.க பாலம் வந்​ததும் காரை நிறுத்​து​மாறு ஓட்​டுநர் தனசேகரனிடம் கூறி​யுள்​ளார். ‘மெது​வாக காரில் செல்​லுங்​கள். சிறிது தூரம் காலாற நடந்து வரு​கிறேன்’ என்று தெரி​வித்​துள்​ளார்.ஓட்​டுநர் காரை நிறுத்​தி​யதும், இறங்​கிச் சென்று ஆற்​றில் குதித்​துள்​ளார். சென்​னை, செங்​கல்​பட்டு விநி​யோகஸ்​தர்​கள் சங்​கத் தலை​வர் உள்​ளிட்ட பதவி​களை வகித்​துள்​ளார். அவர் திடீரென தற்​கொலை செய்​து​கொண்​டது, திரைத்​துறை​யில்​ அதிர்ச்​சி​யை ஏற்​படுத்​தியுள்​ளது. தலைவர்கள் இரங்கல் : கே.ராஜன் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சியும் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

Related posts