தமிழக தலைவர்களை வீடு தேடி சென்று சந்திக்கும் தமிழக முதல்வர்

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றார். இந்த சூழலில், அவர் இன்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். பதிலுக்கு ஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதி ஸ்டாலின் ஜோசப் விஜய்க்கு புத்தகம் வழங்கினார். இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறிது நேரம் உரையாடினார்கள். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சேகர்பாபு உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.இந்தச் சந்திப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் அரசியல் நாகரிகத்துடன் என்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

——
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், அவர் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, சீமான் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். சீமானுக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து சீமானும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு புத்தகம் கொடுத்து மரியாதை செய்தார்.

சீமானுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜோசப் விஜய் புறப்பட்டார். முதல்வர் ஜோசப் விஜய்யை வாசல் வரை வந்து சீமான் வழியனுப்பி வைத்தார்

முன்னதாக, இன்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும், பாமக தலைவர் அன்புமணியையும் அவர்களின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

——-

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், அவர் இன்று பாமக தலைவர் அன்புமணியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பாமக தலைவர் அன்புமணியை சந்திக்க சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த ஜோசப் விஜய்யை, அன்புமணி வாசலுக்கே வந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த சந்திப்பின்போது பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணியும் ஜோசப் விஜய்யை வரவேற்று உபசரித்தார்.

அன்புமணிக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து அன்புமணியும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தார்.

இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் அன்புமணியுடன் சிறிது நேரம் உரையாடினார். அதன்பின்னர் அன்புமணி தனது குடும்பத்தினருடன் முதல்வர் ஜோசப் விஜய்யுடன் படம் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, இன்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

—-

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், அவர் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்திக்க சென்னை அண்ணா நகரில் உள்ள அவரின் இல்லத்துக்கு வந்த விஜய்யை, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஆரத் தழுவி வரவேற்றார். வைகோவுக்கு ஜோசப் விஜய் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்ற நிலையில், பதிலுக்கு வைகோவும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார்.

இதனையடுத்து முதல்வர் ஜோசப் விஜய், வைகோவுடன் சிறிது நேரம் உரையாடினார். இதன் பின்னர் வைகோவும், விஜய்யும் கைகோத்தபடி வெளியே வந்தனர். அப்போது இருவரும் இல்லத்துக்கு வெளியே கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்தபடி மகிழ்ச்சியோடு வந்தனர். அதன்பின்னர் ஜோசப் விஜய்யை வைகோ காரில் வழியனுப்பி வைத்தார்.

முன்னதாக, இன்று முதல்வர் ஜோசப் விஜய் தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரின் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Related posts