ஒரு வலிமையான புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு சிம்ரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தவெக கட்சியினர், விஜய் குடும்பத்தினர், த்ரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தமிழக முதல்வராக விஜய் பேசிய பேச்சு, விஜய்யின் செல்ஃபி வீடியோ உள்ளிட்ட விஷயங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.
தற்போது தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சிம்ரன் தனது எக்ஸ் தளத்தில், “எனது அன்பு நண்பரும், மக்கள் தலைவரும், உண்மையான ‘ஜனநாயகனுமான’ விஜய், தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் இன்றைய நாள் வெறும் வரலாற்றுச் சிறப்புமிக்கது மட்டுமல்ல. இது ஒரு வலிமையான புதிய சகாப்தத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது” என்று தெரிவித்துள்ளார் சிம்ரன்.
——-
உங்கள் முன்னால் ஒரு நீண்ட பயணம் காத்திருக்கிறது என்று தமிழக முதல்வர் விஜய்க்கு சந்தோஷ் நாராயணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தவெக கட்சியினர், விஜய் குடும்பத்தினர், த்ரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தமிழக முதல்வராக விஜய் பேசிய பேச்சு, விஜய்யின் செல்ஃபி வீடியோ உள்ளிட்ட விஷயங்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகின்றன.
தற்போது தமிழக முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தளத்தில், “முதலமைச்சர் விஜய்க்கு நல்வாழ்த்துகள், பிரார்த்தனைகள் மற்றும் வெற்றி உண்டாகட்டும். நமது அழகிய மாநிலத்திற்காகப் புதிய சிந்தனைகளையும், புதிய தொடக்கங்களையும் முன்னெடுப்பதற்கான, ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே வாய்க்கக்கூடிய அரிய வாய்ப்பு இது.
இந்த நூற்றாண்டில் முதன்முறையாக, கோடிக்கணக்கான சாமானிய மக்கள் அரசியல் களத்தில் ஏதேனும் ஒரு வகையில் தீவிரமாகப் பங்களிக்க விரும்புகிறார்கள். நமக்கு முன்னால் ஒரு நீண்ட பயணம் காத்திருக்கிறது. கலக்குங்கள் தளபதி” என்று தெரிவித்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.
——-
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு, விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தவெக கட்சியினர், விஜய் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் தமிழக முதல்வராக விஜய் பேசிய பேச்சு, விஜய்யின் செல்ஃபி வீடியோ உள்ளிட்ட விஷயங்கள் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகின்றன.மேலும், தமிழக முதல்வரான விஜய்க்கு இணையத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தற்போது தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரான விஷால் தனது எக்ஸ் தளத்தில், “நமது மதிப்பிற்குரிய முதல்வர், நான் எப்போதும் அன்புடன் அழைப்பது போல தளபதி விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராகப் பதவியேற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நமது துறையைச் சேர்ந்த ஒரு ஆளுமை அரசாங்கத்தை வழிநடத்துவதைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் வருங்கால அமைச்சர்களுக்கும் நல்வாழ்த்துகள். இது நமது மாநிலத்தின் பொற்காலமாக அமையட்டும். அன்பிற்குரிய விஜய் சார், கடந்த 32 ஆண்டுகளாக எனக்கு அறிமுகமான ஒருவரை, இப்போது ‘சார்’ என்று மரியாதையுடன் அழைப்பதில் பெருமை கொள்கிறேன்.
ஒரு வாக்காளராக, உங்களிடம் பின்வரும் கோரிக்கையை முன்வைக்கிறேன்: ஒரு முதலமைச்சர் தனது இல்லத்திலிருந்து தலைமைச் செயலகத்திற்குப் புறப்படும்போது, வெயிலில் தேவையின்றி நீண்ட நேரம் நின்று கொண்டிருக்கும் பெண் காவலர்களின் நிலையை நீங்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். தயவுசெய்து அவர்களுக்கு நடமாடும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஆம், நிறைவேற்றப்பட வேண்டிய தேர்தல் வாக்குறுதிகள் பல உள்ளன. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக மழைநீர் தேங்கி நிற்கும் அதே நிலையிலேயே இருக்கும் சாலைகளைச் சீரமைப்பது, எப்போதுமே எட்டாக்கனியாகவே இருக்கும் மழைநீர் வடிகால் வசதிகளைக் கொண்டுவருவது போன்ற அடிப்படைத் தேவைகளின் பட்டியல், ஒரு சாமானியனின் பார்வையில் நீண்டு கொண்டே செல்கிறது.
இருப்பினும், இத்தகைய அடிப்படைப் பிரச்சினைகளில் நீங்கள் தனி கவனம் செலுத்தித் தீர்க்கும்போது, இதுவரை எந்தத் தலைவரும் செய்யாத ஒரு மகத்தான சாதனையை நீங்கள் நிகழ்த்திக் காட்டுவீர்கள். பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் உங்கள் கடமைகளைச் செவ்வனே ஆற்ற, தேவையான நேர்மறை ஆற்றலையும் மன உறுதியையும் இறைவன் உங்களுக்கு நிறைவாக அருளட்டும்” என்று தெரிவித்துள்ளார் விஷால்.
—-
உங்கள் அரசு, தமிழ்நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு ஆர்.ஜே.பாலாஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் விஜய். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் தவெக கட்சியினர், விஜய் குடும்பத்தினர், த்ரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வராக அதிகாரபூர்வமாக விஜய் பதவியேற்று உள்ளதால், அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இது தொடர்பாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தனது எக்ஸ் தள பதிவில்,”தமிழக முதல்வர் C.ஜோசப் விஜய்!!! இது நம்பவே முடியாத ஒரு உணர்வாக இருக்கிறது..!!! உங்களுக்கும், உங்கள் அமைச்சரவை சகாக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்…!!!
உங்களையும், உங்கள் நோக்கங்களையும் நன்கு அறிந்தவன் என்ற முறையில், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் முற்போக்கான உங்கள் அரசு, நமது பெருமைமிகு மாநிலத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு சிறப்பான அனைத்தும் அமைய வாழ்த்துகிறேன். நம் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
—–
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள விஜய், மக்கள் நல அரசினை வழிநடத்துவார் என்று நம்புவதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார் சி. ஜோசப் விஜய். இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மேலும் தவெக கட்சியினர், விஜய் குடும்பத்தினர், த்ரிஷா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
தமிழக முதல்வராக அதிகாரபூர்வமாக விஜய் பதவியேற்று உள்ளதால், அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இது தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் தனது ”எக்ஸ்” தள பதிவில், “தமிழ்நாட்டு முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய்க்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மக்கள் நல அரசினை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறேன். மக்கள் தீர்ப்பிற்கு மதிப்பளித்து தமிழக வெற்றிக் கழக அரசிக்கு ஆதரவு நல்கியிருக்கும் இந்திய தேசிய காங்கிரஸுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலைச் சிறுத்தைகளுக்கும் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-க்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
——
