கலாச்சார மாற்றங்களை பேசும் ‘பிரேக் பாஸ்ட்’

விஜய் தேவர​கொண்டா இப்​போது ‘ரண​பாலி’ என்ற படத்​தில் நடித்து வரு​கிறார். இதில் அவர் ஜோடி​யாக ராஷ்மிகா மந்​தனா நடிக்​கிறார்.

வரலாற்று பின்​னணி​யில் உரு​வாகும் இப்​படத்தை அடுத்து அவர் நடிக்​கும் படத்தை ‘ஹாய் நன்​னா’வை இயக்​கிய சவுர்​யுவ் இயக்​கு​கிறார். வைரா நிறு​வனம் சார்​பில் டாக்​டர் வியேந்​தர் ரெட்டி தயாரிக்​கிறார். இன்​னும் பெயரிடப்​ப​டாத இந்​தப் படத்​தில் சர்​வ​தேச கலைஞர்​கள் சிலர் பணி​யாற்​றுகின்​றனர்.

‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’, ‘ஃபால் அவுட்’ போன்ற உலகளா​விய படைப்​பு​களுக்​காக அறியப்​படும் அலெக்​சாண்​டர் மார்ட்​டினஸ் இப்​படத்​துக்கு ஒளிப்​ப​திவு செய்​கிறார். ‘காட்ஸ் ஆஃப் எகிப்​து’, ‘பேட்​மேன் பார் எவர் ‘ஸ்​னோபிர்​சர் போன்ற படங்​களின் பின்​னணி​யில் செயல்​பட்ட எரிக் டர்​ஸ்ட் இதன் விஎஃப்​எக்ஸ் பணி​களைக் கவனிக்​கிறார். ஹேஷம் அப்​துல் வஹாப் இசை அமைக்​கிறார்.

இப்​படத்​தின் அறி​விப்பு போஸ்​டர் வெளி​யாகி இருக்​கிறது. அதில் விஜய் தேவர​கொண்டா நாய்​களைப் பிடித்​த​படி செல்​கிறார். இயக்​குநர் குதிரையைப் பிடித்​த​படி​யும் மற்​றவர்​கள் ஆயுதங்​களைத் தாங்​கியபடி​யும் செல்​கின்​றனர். “இந்த எல்லா கோப​மும் ஒரு​காலத்​தில் அன்​பாக இருந்​தது” என்று டேக் லைன் வைத்​துள்​ளனர். இந்த போஸ்​டர் இணை​யத்​தில் பரவி வரு​கிறது.

———–

நடிகை ராஷ்மிகா மந்​த​னா, நாயகிக்கு முக்​கி​யத்​து​வம் கொண்ட ‘மை​சா’ என்ற படத்​தில் நடித்து வரு​கிறார். அறி​முக இயக்​குநர் ரவீந்​திர புள்ளே இயக்​கும் இந்​தப் படத்தை அன்ஃ​பார்​முலா பிலிம்​ஸ், ‘பான் இந்​தி​யா’ படமாகத் தயாரிக்​கிறது. இது, கோண்ட் பழங்​குடி​யினரின் சுவாரஸ்​ய​மான உலகத்தை மைய​மாகக் கொண்ட ஆக் ஷன் த்ரில்​லர் படம் என இயக்​குநர் ஏற்​கெனவே தெரி​வித்​திருந்​தார்.

இப்​படத்​திலிருந்து வெளி​யான ராஷ்மி​கா​வின் தோற்​றம் எதிர்​பார்ப்பை ஏற்​படுத்தி இருந்​தது. இப்​படத்​துக்​கான ஆக் ஷன் காட்சி படப்​பிடிப்பு கேரளா​வில் விரை​வில் தொடங்க இருக்​கிறது. 16 நாட்​கள் இக்​காட்​சி​யைப் படமாக்க உள்​ளனர். இந்​நிலை​யில் இந்த மிரட்​டலான ஆக் ஷன் காட்​சிக்​கான பயிற்​சியை நடிகை ராஷ்மிகா மந்​தனா, தாய்​லாந்​தின் பாங்​காங்​கில் மேற்​கொண்​டுள்​ளார்.

புகழ்​பெற்ற ஸ்டன்ட் நிபுணர்​களின் மேற்​பார்​வை​யில், மேம்​பட்ட சாகச நுட்​பங்​கள் மற்​றும் ஆக்‌ஷன் முறை​களைத் தின​மும் சுமார் 8 மணி நேரம் ராஷ்மிகா பயின்று வரு​கிறார்.

——

விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்கிய வெங்கட்பிரபு, அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருந்தார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருந்தது. டைம் டிராவல் கதையான இதன் விஎப்எக்ஸ் காட்சிகளுக்காக அமெரிக்கா சென்று வந்தனர். ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் தயாரிப்பு தரப்பில் அதைக் குறைக்கச் சொன்னதாகக் கூறப்பட்டது.

சிவகார்த்திகேயன் அடுத்து ‘சேயோன்’ படத்தில் நடித்து வருகிறார். இதனால் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கும் படம் டிராப் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ‘மங்காத்தா’ படத்தின் 2-ம் பாகத்தை இயக்க இருக்கிறார் என்றும் அதற்கான டிஸ்கஷன் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அஜித், அர்ஜுன், த்ரிஷா, ராய் லட்சுமி, அஞ்சலி உள்பட பலர் நடித்து 2011-ல் வெளியான ‘மங்காத்தா’ சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது.

——

விஷால் நடித்த ‘செல்​லமே’, தமன்னா நடித்த ‘ஆனந்த தாண்​ட​வம்’ படங்​களை இயக்​கிய, காந்தி கிருஷ்ணா இப்​போது இயக்​கி​யுள்ள படம் ‘பிரேக் பாஸ்ட்’. புது​முகங்​கள் ராணவ், ரோஸ்​லின், க்ரித்​திக் மோகன், அமிதா ரங்​க​நாதன் மற்​றும் அர்ச்​ச​னா, சம்​பத்​ராம், ரவிமரியா நடித்​துள்​ளனர்.

பிரேம் கிளாசிக் பிக்​சர்ஸ் சார்​பில் கிரிஜா வரத​ராஜ் தயாரித்​துள்​ளார். ஜி.​வி.பிர​காஷ் குமார் இசை அமைத்​துள்​ளார். ஏப்​.24-ல் வெளி​யாகும் இப் படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர்.

நடிகை அமிதா பேசும்​போது, “காதலிப்​பது எல்​லோருக்​கும் எளிது. ஆனால், காதலில் நிலைத்து நிற்​பது கடினம். ஏன் என்​றால் நம் எல்​லோரிட​மும் ஒரு வெற்​றிடம் இருக்​கிறது. அதை நிரப்ப நம் தாயின் அன்​பை, துணை​யிடம் தேடும்​போது தான் பிரச்​சினை ஆரம்​பிக்​கிறது. திரு​மணம் ஆனவர்​கள் இந்​தப் படத்தை நிச்​ச​யம் பார்க்க வேண்​டும். சின்ன ஈகோ கூட எப்​படி பெரிய பிரச்​சினை​யாக மாறுகிறது என்​பதை இந்​தக் கதை சொல்​லும்” என்​றார்.

இயக்​குநர் காந்தி கிருஷ்ணா, “இதில் அனை​வரும் சிறந்த நடிப்பை வெளிப்​படுத்​தி​யுள்​ளனர். இசையமைப்​பாளர், ஒளிப்​ப​தி​வாளர், தயாரிப்​பாளர்​கள் அனை​வருக்​கும் மிக்க நன்​றி. கடந்த 10 வருடத்​துக்குள் நடந்த கலாச்​சார மற்​றும் உளவியல் ரீதி​யான மாற்​றங்​களைப் பற்றி இதில் பேசி​யிருக்​கிறோம். இந்த மாற்​றங்​களால் நிறைய சந்​தோஷங்களை இழந்​திருக்​கிறோம். அதை எப்​படிச் சரி செய்​ய​லாம் என்று இப்​படத்​தில் சொல்​லி​யிருக்​கிறோம்” என்​றார்.

Related posts