இன்றைய காலை நேர சினிமா செய்திகளின் தொகுப்பு

மோகன்லால் நடித்துள்ள அவருடைய 366-வது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மெகா வெற்றி பெற்ற ‘துடரும்’ படத்தை அடுத்து அதன் இயக்குநர் இயக்குநர் தருண் மூர்த்தியுடன் மீண்டும் இணைந்துள்ளார் மோகன்லால். அவருடைய 366-வது திரைப்படமான இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிக்கிறார்.

ஆஷிக் உஸ்மான் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சித்திரை விசுவை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பை மோகன்லால் வெளியிட்டுள்ளார். இப்படத்துக்கு ‘அதி மனோகரம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

——–

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `கர’ படம் ஏப்.30ம் தேதி வெளியாகிறது. இதில் மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். இதையடுத்து அவர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்க இருந்தார்.

தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘ஏஸ்’ படத்தில் நடித்த கன்னட நடிகையான ருக்மணி வசந்த், ‘மதராஸி’யில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தார். ‘காந்தாரா சாப்டர் – 1’ படம் மூலம் பிரபலமானார். அடுத்து, ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து விலகி விட்டார் என்கிறார்கள்.

பிரசாந்த் நீல் – ஜூனியர் என்டிஆரின் `டிராகன்’ படத்துக்கு அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதால் இப்படத்தில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க சாரா அர்ஜுனிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜுன், ‘துரந்தர்’ வெற்றி மூலம் முன்னணி நடிகையாகி இருக்கிறார்.

——

ஆர்.பன்னீர் செல்வம் இயக்குநராக அறிமுகமான திரைப்படம், ‘ரேனிகுண்டா’. ஜானி, சனுஷா, நிஷாந்த், சந்தீப், தமிழ், தீப்பெட்டி கணேசன் உள்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்தார். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இதன் 2-ம் பாகம் `ரேனிகுண்டா 2′ என்ற பெயரில் உருவாகி வருகிறது.

பன்னீர்செல்வம் இயக்கும் இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்கள், இதிலும் நடிக்கின்றனர். ஷாலினி நிவாஸ் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மறைந்த மலையாள நடிகர் திலகனின் பேரன் அபிமன்யு திலகன் இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இது பற்றி அபிமன்யு திலகன் கூறும்போது, “மார்கோ படத்தில் என் நடிப்பைப் பார்த்துவிட்டு இந்த வாய்ப்பு வந்தது. இதில் 20 நாட்கள் என் காட்சிகள் படமாக்கப்பட்டன. 95 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இதில் நான் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறேன். தமிழ் வசனங்களைப் பேசி நடிக்க இயக்குநர் பன்னீர்செல்வம் உதவினார்” என்றார்.

——-

அட்லி இயக்​கத்​தில் அல்லு அர்​ஜுன் நடிக்​கும் சயின்ஸ் பிக் ஷன் படம் ‘ராக்​கா’. ஃபேன்​டஸி ஆக் ஷன் படமான இதை சன் பிக்​சர்ஸ் தயாரிக்​கிறது. தீபிகா படு​கோன் நாயகி​யாக நடிக்​கிறார்.

ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்​தனா உள்பட பலர் நடிக்​கின்​றனர். அல்லு அர்​ஜுனின் 42-வது பிறந்த நாளை முன்​னிட்டு இப்​படத்​தின் தலைப்​பை​யும் அவரது தோற்​றத்​தை​யும் படக்​குழு வெளியிட்டிருந்தது. அல்லு அர்​ஜுனின் வித்​தி​யாச​மான லுக் வரவேற்​பைப் பெற்றிருந்​தது. இந்​நிலை​யில், இதில் ஷாருக்​கான் கவுரவ வேடத்​தில் நடிக்க இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

ரஜினி​யின் ‘ஜெ​யிலர் 2’ படத்​தில் இருந்து வில​கிய ஷாருக்​கான், இதில் நடிக்க இருக்​கிறார். அட்லி இயக்​கிய ‘ஜவான்’ படத்​தில் ஷாருக்​கான் நடித்​திருந்​தார். அந்​தப் படம் ஆயிரம் கோடிக்​கும் மேல் வசூலித்​தது. அந்த நட்​பின் அடிப்​படை​யில் ‘ராக்​கா’ படத்​தில் அவர் கவுரவ வேடத்​தில் நடிக்க இருப்​ப​தாகத் தகவல் வெளியாகியுள்​ளது. இதுகுறித்த அதி​காரப்​பூர்வ அறி​விப்பு வெளியாக இருக்​கிறது.

Related posts