விஜய் அதே தயாரிப்பு நிறுவனத்தில மீண்டும் நடிக்க திட்டம்

நடிகர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படம் வெளி​யான அனைத்து இணை​யதளங்​களை​யும் முடக்கி சைபர் க்ரைம் போலீ​ஸார் நடவடிக்கை எடுத்​துள்​ளனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழக வெற்​றிக் கழகத்​தின் தலை​வர் நடிகர் விஜய் நடிப்​பில், முன்​னணி இயக்​குநர் ஹெச்​.​வினோத் இயக்​கத்​தில் உரு​வான திரைப்​படம் ஜனநாயகன். விஜய்​யின் திரைப்​பயணத்​தில் இது கடைசிப் படம் என்​ப​தால், உலகெங்​கிலும் உள்ள ரசிகர்​கள் மத்​தி​யில் இப்​படத்​துக்கு பெரும் எதிர்​பார்ப்பு நிலவி வந்​தது. கடந்த ஜனவரி மாதம் பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு வெளி​யாக வேண்​டிய இப்​படம், தணிக்கை சிக்​கல்​களால் தள்​ளிப்​போனது.

நீண்ட போராட்​டத்​துக்​குப் பிறகு, கடந்த மாதம் மறு தணிக்​கைக் குழு படத்தை ஆய்வு செய்​தது. விரை​வில் தணிக்​கைச் சான்​றிதழ் பெற்று படம் திரையரங்​கு​களில் வெளி​யாகும் என ரசிகர்​கள் ஆவலோடு காத்​திருந்த வேளை​யில், ஜனநாயகன் திரைப்​படத்​தின் முழுப் பதிப்​பும் இணை​யதளங்​களில் சட்​ட​விரோத​மாகக் கசிந்​து, படக்​குழு​வினர் மட்​டுமின்​றி, தமிழ் சினிமா துறையையே அதிர்ச்சி அடையச் செய்​தது. இந்த விவ​காரம் தொடர்​பாக டிஜிபி அலு​வல​கத்​தில் அளிக்​கப்​பட்ட புகாரின்​பேரில், சைபர் க்ரைம் போலீ​ஸார் விசா​ரணையை மேற்​கொண்​டனர்.

இணையதளம் முடக்கம்: முதல்​கட்​ட​மாக, படம் வெளி​யான அனைத்து இணை​யதள முகவரி​களை​யும் கண்​டறிந்​து, அவற்றை சைபர் க்ரைம் போலீ​ஸார் தற்​போது முடக்​கி​யுள்​ளனர். மேலும் இவ்​வளவு பெரிய பட்​ஜெட் படத்தை இணை​யத்​தில் வெளி​யிட்ட நபர்​கள் யார்?

இதன் பின்​னணி​யில் இருப்​பவர்​கள் யார்? என்​பது குறித்து தீவிர விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இந்த விவ​காரம் தொடர்​பாக மாநில சைபர் கிரைம் போலீ​ஸார் 6 பேரை கைது செய்​துள்​ளனர். தொடர்ந்து விசா​ரணை நடை​பெறுகிறது.

இப்படத்தைத் தயாரித்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதால் விஜய் அதே தயாரிப்பு நிறுவனத்தில மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை இயக்குநர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ் அல்லது நெல்சன் ஆகியோர் இயக்கவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.தேர்தல் முடிவுகள் வெளியான பின் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது….

Related posts