‘ஜனநாயகன்’ பட காட்சிகள் சமூக வலைதளத்தில் கசிவு

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் காட்சிகள் சில சமூக வலைதளத்தில் கசிந்துள்ளன. இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனத்துக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் நடிகர் விஜய், ஜனநாயகன் படம்தான் தனது கடைசி படம் என அறிவித்தார். இந்த படத்தில் அவருடன் பூஜா ஹெக்​டே, மமீதா பைஜு, பாபி தியோல் உள்பட பலர் நடித்துள்​ளனர். கே.​வி.என்​.புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இப்​படத்தை கடந்த ஜன.9-ல் ரிலீஸ் செய்ய போவ​தாக அறி​வித்​திருந்​தனர்.

இந்நிலையில், இந்த படத்​தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இடம் பெற்​றுள்​ள​தாகக் கூறி, படத்தை மறுஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. பட தணிக்கை சார்ந்த சிக்கல் காரணமாக இந்தப் படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் மூன்று காட்சிகள் சமூக வலைதளத்தில் கசிந்துள்ளன. இதன் மொத்த ரன் டைம் சுமார் 10+ நிமிடங்களை கொண்டுள்ளது. ஜனநாயகன் படத்தின் காட்சிகள் கசிய காரணமானவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனத்துக்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜனநாயகன்’. தணிக்கைச் சிக்கலால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் தாமதமாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தன. இது படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இது குறித்து தயாரிப்பாளர் தரப்பில் சட்டபூர்வமாக ஓர் எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. அதில், கசிந்த ‘ஜனநாயகன்’ காட்சிகளை பதிவிறக்கம் செய்தாலோ, சமூக வலைதளங்களில் பகிர்ந்தாலோ சட்டபூர்வ நடவடிக்கை உறுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸின் விவரம் வருமாறு:

‘நான் கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனத்தின் சட்ட ஆலோசகர். எனது கட்சிக்காரரின் அறிவுறுத்தல்களின்படி இந்தப் பொது அறிவிப்பை வெளியிடுகிறேன்.

எனது கட்சிக்காரர், விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்கு, சாட்டிலைட், ஒடிடி மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சில காட்சிகள், சில நபர்களால் சட்டவிரோதமாக அணுகப்பட்டு, பதிவிறக்கம் செய்யப்பட்டு, நகலெடுக்கப்பட்டு, பல மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டு, பல்வேறு சமூக ஊடகத் தளங்கள் மூலம் டிஜிட்டல் கசிவு ஏற்படும் தீவிர அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன என்பது எனது கட்சிக்காரரின் கவனத்துக்கு மிகுந்த அதிர்ச்சியுடனும் அவசரத்துடனும் வந்துள்ளது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொலிகளை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டோரண்ட்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றுவது, மீண்டும் பதிவிடுவது, சேமிப்பது அல்லது பரப்புவது ஒரு கடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறலாகும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்றும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்து அனுப்பிய நபருக்கு எதிராக எனது கட்சிக்காரர் ஏற்கெனவே உரிய சட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளார். மேலும், இத்தகைய சட்டவிரோதப் பரப்பலில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts