தீபிகா படுகோன் காட்டமான பதிலடி

8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும் என கூறியது சர்ச்சையானதற்கு தீபிகா படுகோன் காட்டமாக பதிலடிக் கொடுத்துள்ளார்.
சமீபத்தில் ‘கல்கி 2989 ஏடி’ படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதற்கான காரணங்கள் என பல விஷயங்கள் வெளியாகின. அதற்கு முன்னதாக ‘ஸ்பிரிட்’ படத்திலும் தீபிகா படுகோன் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. அதற்கான காரணங்களும் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை உருவாக்கின.
தினமும் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிய முடியும் என்று தீபிகா கூறியதே இதற்கு காரணம் எனப் பலரும் குறிப்பிட்டார்கள். இது தொடர்பாக முதன்முறையாக தீபிகா படுகோன் பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார்.
இந்திய திரையுலகில் பல்வேறு முன்னணி ஆண் நடிகர்கள் பல வருடங்களாக தினமும் 8 மணி நேரம் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறார்கள். அதெல்லாம் தலைப்பு செய்தியாகவில்லை. ஆனால், நான் சொன்னால் மட்டும் பெரிய செய்தியாகிவிடுகிறது. ஏன் என்று தெரியவில்லை.

Related posts