சசிகுமாரின் “பீரிடம்” படத்திற்கு “யு/ஏ” சான்றிதழ்

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அண்மையில் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றி தொடர்ந்து சசிகுமார் பீரிடம் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தினை சத்யசிவா இயக்கி உள்ளார்.

இதில் கதாநாயகியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார்’ இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது.

இத்திரைப்படம் வரும் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் தணிக்கை வாரியம் பீரிடம் படத்திற்கு “யு/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளது.

டூரிஸ்ட் பேமிலி படத்தை போல இப்படமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1995-ல் நடந்த உண்மைக் கதை. 1995 முதல் 99 வரை வேலூர் சிறையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் அகதிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்தார்களா, இல்லையா என்பதை சொல்லும் படம் இது.

அப்போது நடந்த இந்தச் சம்பவம் பெரிதாக யாருக்கும் தெரியாது. இவ்வளவு மீடியா அந்த காலகட்டத்தில் இல்லை.

இயக்குநர் சத்ய சிவாவின் ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். வெற்றி தோல்வி எல்லாம் ஒன்றுமில்லை, அவருடைய கதையைத் தான் பார்த்தேன். எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும்” என்றார்.

Related posts