ஏஐ மூலம், மறைந்த பாடகர்களின் குரல்..

லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது மறைந்த பின்னணி பாடகர்கள் பம்பா பாக்கியா, சாகுல் ஹமீது குரல்களில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ‘திமிரி எழுடா’ பாடல் வெளியிடப்பட்டது. சமீபகாலமாக ஏஐ பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் அதிகமாக இருந்து வருகின்றன.

இந்த சமயத்தில் ‘லால் சலாம்’ பட பாடலில் மறைந்த பின்னணி பாடகர்களின் குரல் ஏஐ மூலம் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பாடகர்களின் குடும்பத்தினரின் அனுமதி இல்லாமல் இந்த பாடல் உருவாக்கப்பட்டு உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகாரளித்து வந்தனர்.

இந்த சர்ச்சை குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் விளக்கமளித்து உள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், மறைந்த பின்னணி பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீதின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்துவதற்கு அவர்களது குடும்பத்தினரிடமிருந்து முறையாக அனுமதி பெறப்பட்டு உள்ளது.

மேலும் அதற்கான சன்மானமும் அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஏஐ என்பது ஒரு அற்புதமான தொழில்நுட்பம். அதை சரியாக பயன்படுத்தும்போது எந்த ஒரு தொல்லையோ அல்லது அச்சுறுத்தலோ இருக்காது’ என்று பதிவிட்டு உள்ளார்.

Related posts