கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் வெளியீடு

தனுஸ் நடிப்பில் நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மகேஸ்வரன் இயக்கும் இப்படம் பொங்கலுக்கு வெளிவரும் என்பது இன்றைய முக்கிய செய்தி.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஸ் இசையமைத்துள்ளார். இன்னொரு முக்கிய பாத்திரத்தில் பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.

நடிகர் தனுஸ் தனது ரிவிற்றர் பக்கத்தில் இதை பதிவு செய்துள்ளார். சமீபகாலமாக தனுஸ் படங்கள் சறுக்கல் அடைந்து வரும் நிலையில் கேப்டன் மில்லர் தனுஸ் ரசிகரிடையே பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது.

விஜயகாந்த் கேப்டன் பிரபாகரன் என்று பெயர் வைத்தது போல ஒரு வேலையையே இப்போது தனுஸ் செய்துள்ளார். ஈழத்தில் போராட்ட புகழ் பெற்றோர் பெயர்களை திரைப்படங்களுக்கு வைப்பது சரியா என்ற கேள்வி இருக்கிறது.

சினிமாவில் வரும் மூன்றாந்தர நாலாந்தர செயல்களுக்கு இப்படியான பெயர்கள் பொருந்துமா என்பதை சிந்திக்கும் ஆற்றல் தனுசிற்கு இல்லை என்பதை சொல்லவும் வேண்டுமோ..?

இப்படி ஒரு யாராவது புலம் பெயர் தமிழர் பாவித்து படம் எடுத்திருந்தால் பகிஸ்கரிக்க கச்சை கட்டி நிற்கும் புலம் பெயர் வீரர் சிலர் இப்படியான படங்களுக்கு விசிலடித்து மகிழ்வதும் தனியான கூத்தாக இருக்கிறது.

அலைகள் 14.12.2023

Related posts