இன்றைய பழமொழிகள் : கன்ஃபூசியஸ் சிந்தனைகளில் இருந்து…

இவர் சீனாவில் 551ம் ஆண்டு பிறந்த தத்துவஞானி 2500 வருடங்களுக்கு முன்னரே ஒரு நல்ல அரசாங்கம் எப்படியிருக்க வேண்டுமென சொல்லி வைத்தவர். அவர் கருத்துக்களில் சில இன்றைய அலைகள் பழமொழியாக தரப்படுகிறது.

01. அதிக வரி விதிப்பதும், அதிகமாக தண்டனை அளிப்பதும் ஒரு கொடுங்கோல் ஆட்சியின் இயல்புகளேயல்லாது அது நல்லாட்சி அல்ல.

02. அரசன் என்பவன் தகுதியின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட வேண்டும் அவன் ஒருபோதும் வெறும் வரட்டுத்தனமான பரம்பரையை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்படலாகாது.

03. மக்களுக்கு நல்வாழ்வையும் மகிழ்ச்சியையும் அளிக்காத அரசாங்கம் ஒரு நொடி கூட பதவியில் நீடிக்கக் கூடாது.

04. அரசு பணியில் இருந்தால் நீங்கள் யாரோ ஒருவன் நலத்திற்காக மட்டுமே உழைக்கிறீர்கள் ஒரு நாள் அவனால் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள். தனியார் நிறுவனமும் அப்படியே.

05. எது வசதியோ அதைச் செய்யாதே.. எது சரியானதோ அதை மட்டுமே செய்..

06. மக்கள் ஆட்சியாளர் மீது நம்பிக்கை இழந்தால் ஒரு நாள் அந்த நாடே இல்லாது போய்விடும்.

07. எது உங்கள் உயர்வுக்கு காரணம் என்று சிலர் அவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்.. :
அ) வாழ்வில் அனுபவங்களே என்னை மேம்படுத்தின..
ஆ) அனுபவம் பெற்ற யாருமே வாழ்வில் உயர்ந்துவிடுவதில்லை
இ) அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்பவனே உயர்கிறான்.
ஈ) முன்னேற விரும்பும் ஒருவன் எப்போதும் அறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டும் உ) அதைவிட மேலும் கடின உழைப்பும், தெளிந்த சிந்தனையும் சுத்தமான வாக்கும் உயர விரும்புவபனுக்கு மிக அவசியம்.

08. இருட்டு இருட்டு என்று சொல்வதை விட நீயாக வந்து அந்த இடத்தில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வை..

09. உலகின் மிகப்பெரிய ஆயுதம் மௌனம்தான்.

10. நாம் செய்த நல்லவைகள் என்றுமே நிலைத்து நிற்கும். இதை ஒரு மனிதன் உணர்ந்துவிட்டால் அவன் மரணத்தை சந்திக்கும்போது கூட அதற்காக வருந்தமாட்டான்.

அலைகள் பழமொழிகளுக்காக 10.12.2023

Related posts