விளையாட்டுத்துறை அமைச்சரின் நேரடி ஊடகவியலாளர் மாநாடு!

இலங்கை கிரிக்கெட் தொடர்பிலான தற்போதைய நிலைமைகளை வெளிப்படுத்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தீர்மானம் மற்றும் கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(பின்னிணைப்பு – 2.48 pm) இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இடைநிறுத்தியமை தொடர்பில் மேன்முறையீடு செய்யப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தற்போது நடைபெறும் விசேட செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க,

இலங்கை கிரிக்கெட் தலைவர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கிரிக்கெட் தடை செய்யப்பட்டதாக தெளிவாக புலனாகிறது.

கொழும்பு ஹோட்டல் ஒன்றில் இலங்கை கிரிக்கெட் தடை செய்யப்பட்டமைக்கு மதுபோதை ஊடாக மகிழ்ச்சியை வௌிப்படுத்தியதாக தகவல்.

நாட்டிற்கு துரோகம் செய்யும் ஒரு குழு உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

Related posts