‘மார்க் ஆண்டனி’ படத்தின் புதிய பாடலை வெளியிட்ட படக்குழு

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.

மேலும் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. கேங்ஸ்டர் கைகளில் டைம் மிஷின் (Time Machine) கிடைத்தால் என்ன ஆகும் என்பதை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த படத்தின் சில பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் புதிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி ‘கருப்பன சாமி’ என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மதுரகவி எழுதியுள்ள இந்த பாடலை ஆனந்து பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts