லண்டனில் செப்டம்பர் ‘லியோ’ டிக்கெட் முன்பதிவு

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.
அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் இருந்து நடிகர் விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் கோடிக்கணக்கான பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 23-ந்தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் ‘லியோ’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு 6 வாரங்களுக்கு முன்னதாகவே தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் அக்டோபர் 19-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், லண்டனில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 7-ந்தேதியில் இருந்து தொடங்கும் என பட
வெளியீட்டு நிறுவனமான அஹிம்சா எண்டர்டென்மெண்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் லண்டன் வாழ் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts