கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் வெளியானது

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது .

இந்த டீசர் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

Related posts