‘அநீதி’ படத்தின் டிரைலர் வெளியானது..!

வெயில்’, ‘அங்காடித்தெரு’, ‘அரவாண்’, ‘காவியத்தலைவன்’, ‘ஜெயில்’ ஆகிய படங்களை இயக்கிய வசந்தபாலன், அடுத்ததாக ‘அநீதி’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இதில் அர்ஜுன் தாஸ், துஷாரா, அர்ஜுன் சிதம்பரம், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

படத்தின் வெளியீட்டு உரிமையை இயக்குநர் ஷங்கரின் ‘எஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘அநீதி’ திரைப்படம் வருகிற ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts