முதல் படமும் வெற்றி.. கடைசி படமும் வெற்றி

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.
இதில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை பார்த்த ரஜினி, தனுஷ், பா.இரஞ்சித், விக்னேஷ் சிவன், உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாமன்னன் படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது , இப்படத்தின் உண்மையான மாமன்னன் வடிவேலு தான். நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த அனைவர்க்கும் நன்றி .
இந்த படத்திற்கு நாங்கள் (படக்குழு) கொடுத்த விளம்பரத்தை விட நீங்கள் கொடுத்த விளம்பரத்தால் தான் மக்கள் மத்தியில் இப்படத்தை எளிதில் கொண்டு போய் சேர்க்க முடிந்தது. தமிழ், மலையாளம், கன்னடம் என மொத்தம் 9 நாள்களில் இப்படம் 52 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது” என்றார்.
என்னுடைய முதல் படமும் (ஒரு கல் ஒரு கண்ணாடி ) வெற்றி.. கடைசி படமும் வெற்றி. என கூறினார்.

Related posts