சிவகார்த்திகேயன் ஜோடியாக மிருணாள் தாக்குர்?

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மடோன் அஸ்வின் இயக்கும் இதில் அதிதி ஷங்கர் கதாநாயகி. மிஷ்கின், யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இதையடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கான படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இதை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இதில் சாய் பல்லவி கதாநாயகி. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மிருணாள் தாக்குர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts