சென்னையில் உலகத்தரத்தில் பன்னாட்டு அரங்கம்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தரப்பிலும், தி.மு.க. கட்சி சார்பிலும் மிக பிரமாண்டமாக விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதி நூற்றாண்டு விழா லோகோ (இலச்சினை) வெளியிட்டார். அதனை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக்கொண்டார். இந்த விழாவில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி என்றால் அது கலைஞர் கருணாநிதி தான். தமிழ் சமூகத்திற்கு உயிராக இருந்தவர் கருணாநிதி. கருணாநிதி வகுத்த வழியில் தான் தமிழகத்தில் அனைத்து துறைகளும் இயங்குகின்றன. மக்கள் மனங்களில் இன்றும் ஆட்சி செய்கிறார் கருணாநிதி. திராவிட மாடல் அரசின் புகழை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன்.

50 ஆண்டு காலத்தின் தமிழகத்தில் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் கலைஞர் கருணாநிதி. கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.

கருணாநிதி திமுகவின் சொத்து அல்ல; உலக தமிழர்களின் சொத்து. நூற்றாண்டு விழா கருணாநிதி புகழ்பாடும் விழாவாக மட்டுமல்லாமல், தமிழ் சமுதாயத்திற்கு அவர் செய்தவற்றை நினைவுப்படுத்தும் விழாவாக இருக்கும். சென்னையில் டைடல் பார்க்கை உருவாக்கி தகவல் தொழில் புரட்சியை ஏற்படுத்தியவர் கருணாநிதி. பெரியாரின் கொள்கை வாரிசான கருணாநிதியை வாழ்த்துவதற்காக காந்தியின் பேரன் வந்துள்ளார்.

பெரியார் சுய மரியாதை இயக்கத்தை துவங்கும் முன் காந்தியின் தொண்டராக தான் இருந்தார். கோட்சேவால் காந்தி சுட்டு கொல்லப்பட்ட போது பெரியார் அடைந்த வேதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

உலக தரத்தில் சென்னையில் கலைஞர் கன்வென்சன் என்ற பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். 25 ஏக்கர் பரப்பளவில் 5,000 பேர் அமரும் வகையில் உலக தரத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

பன்னாட்டு மாநாடுகள், திரைப்பட விழாக்கள் எல்லாம் அங்கு நடைபெறும். சிங்கப்பூர் ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது இந்த எண்ணம் உதயமானது. மிக பிரம்மாண்டமான முறையில் கலைஞர் கன்வென்சன் சென்டர் அமையவுள்ளது.

ஜப்பான், சிங்கப்பூரில் மேற்கொண்ட பயணத்தில் ஏராளமான முதலீடுகளை ஈர்த்துள்ளேன். இந்தியாவில் தொழில் தொடங்கினால், தமிழகத்தில் தான் முதலீடு செய்வோம் என்று நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்று நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்றார்.

விழாவில் மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தி பேசியதாவது:- அரசியல் மற்றும் பொது வாழ்வில் பக்குவமானவர் கருணாநிதி.

எம்.ஜி.ஆர் உடல் நலம் தேறி பொது வாழ்வுக்கு திரும்ப வேண்டுகிறேன் என கருணாநிதி எழுதினார்.

நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி. இன்றைய இளம் அமைச்சர்களுக்கும், அவருடைய பேரன் உதயநிதி ஸ்டாலினுக்கும் சொல்ல விரும்புகிறேன். நான் கோவிலுக்கு அடிக்கடி செல்வதில்லை.

கருணாநிதி சன்னதியில் உண்மையை பேச வேண்டும். தற்போது, இந்தியாவில் அரசியல் சூழ்நிலை சரியில்லை.

பேரன்களுக்கு பெயருண்டு, அந்த பெயரை காப்பாற்றுவது பெரிய வேலை. தான் ஒரு சாதாரண மனிதன்.

அடங்காத அமைதியின் உருவகம் மு.க.ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார்.

Related posts