ஏப்.1ல் தைவான் பறக்கிறது இந்தியன் 2 டீம்!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கும் படம், ‘இந்தியன் 2’. லைகா தயாரிக்கும் இந்தப் பிரம்மாண்ட படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அனிருத் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்தது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்புக்காக, படக்குழுவினர் தைவான் மற்றும் தென்னாப்பிரிக்கா செல்கின்றனர். இதற்காக படக்குழு வரும் 1ம் தேதி புறப்படுகிறது.

முதலில் தைவான் செல்லும் படக்குழு, ‘தைபே’ நகரில் 4 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்கிறது. பின்னர் அங்கிருந்து தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகருக்குப் பறக்கிறது. ஏப்ரல் மாத இறுதிவரை அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

Related posts