ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆளும் கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்தது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஜெயக்குமார் மேலும் கூறியாதாவது:- அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்.
வரும் காலங்களில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும்.
அதிமுகவை பொறுத்தவரை கட்சி எழுச்சியாகவே உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவை கண்டு பிற கட்சிகள் பயந்தன. எந்த தேர்தலிலும் இதுபோல திமுக பயந்ததது கிடையது.
திமுக 350 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து போலியான வெற்றியை பெற்றுள்ளது. இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் பணம் பாதாளம் வரை பாய்ந்ததுள்ளது” என்றார்.
—–
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களை சந்திததார்.
அப்போது அவர் கூறியதாவது: இரட்டை இலை இல்லையென்றால் அதிமுகவின் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.
அதிமுகவின் தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். ஈரோடு கிழக்கில் திமுக பெற்ற வெற்றி வழங்கப்பட்டதல்ல..வாங்கப்பட்டது.
—-
இந்த நிலையில், இடைத்தேர்தல் வெற்றி குறித்து சென்னை அறிவாலயத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், இடைத்தேர்தலில் வெற்றியை தந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு திமுக சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவளித்துள்ளனர். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். இந்த ஆட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் தேடித்தந்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு இந்த இடைத்தேர்தல் மிகப்ப்ரிய அச்சாரமாக இருப்பது பாராட்டத்தக்கது.
இந்த வெற்றிக்காக தொடர்ந்து பாடுபட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள் அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் இதைவிட மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
