உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ராஜபக்சர்களால் அநாதரவாக்கப்பட்டதாகவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டாலும், ராஜபக்சர்கள் ஆட்சிக்கு வந்த நாள் முதல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சகலதையும் மூடி மறைக்கும் செயற்பாட்டிலையே ஈடுபட்டதாகவும், தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி சில விசாரணை அறிக்கைகள் வெளியிடப்படவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதன் காரணமாக, இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுமிகவும் திறமையான பாதுகாப்பு முகவராண்மை அமைப்புகள் ஈடுபடுத்தப்படும் எனவும், எந்தவொரு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோருக்கும் மரண தண்டனை வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று (28) வத்தளையில் தெரிவித்தார்.

மரணதண்டனை வழங்குவது லிபரல்வாத கொள்கைக்கு எதிரானது என்று கூறுபவர்களுக்கு, பாடசாலைமாணவர்கள் கூட போதைப்பொருளுக்கு பலியாகி விட்டதாகவே கூற வேண்டியுள்ளதாகவும், எனவே சிங்கப்பூரில் தற்போதுள்ள சட்டங்கள் கொண்டு வரப்பட்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் இல்லாதொழிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

முன்பிருந்த தலைவர்களைப் போல் இலத்திரனியல் திறைகளைப் பார்த்து பேசுவது, ஒருவரின் மேற்பார்வையில் பேசுவது, பேச்சுக்குப் பிறகு பேச்சைத் திருத்தி, மறுவடிவமைத்தல் போன்ற செயற்பாடுகள் தன்னிடம் இல்லை எனவும், தான் சொல்வதெல்லாம் இதயபூர்வமானது எனவும், கூறப்படும் அனைத்தும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வத்தளை, ஜாஎல, கட்டான, நீர்கொழும்பு போன்ற பிரதேச எல்லைகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்நிலங்களை வலுக்கட்டாயமாக தனதாக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை விரும்பிய வேளையில், காதினல் ஆண்டகையும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவனையே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், இதன்விளைவாகவே குறித்த இடங்களை மக்களுக்காக பெற்றுக்கொடுக்க முடிந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related posts