தேர்தலுக்கு பணம் வழங்குவது கடினம்

நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியின் கீழ் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது கடினமென நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் நேற்று தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இதனை அறிவித்துள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பணத்தை ஒதுக்க முடியும் என்ற போதிலும், அந்த சுற்றறிக்கையின் கீழ் தேர்தல் நடவடிக்கைகள் அத்தியாவசிய சேவையாக குறிப்பிடப்படவில்லை என நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அப்படியிருந்தும், அத்தியாவசிய சேவைகள் வகையைச் சேராத நிறுவனங்களுக்குப் பணத்தை வழங்குவதற்கு, நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியைப் பெற வேண்டுமென நிதி அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியதாக, அவர் தெரிவித்துள்ளார்.

Related posts