பாஜகவின் எதிர்மறை அரசியலுக்கு கிடைத்த பதிலடி..

இந்தி திரைத்துறையில் முன்னணி நடிகர் ஷாருக்கான். இவர் நடித்து கடந்த 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் பதான். இப்படம் வெளியாகி 5 நாட்களில் 500 கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது.

இதனிடையே, ஷாருக்கான் – தீபிகா படுகோனே நடித்து வெளியாகியுள்ள பதான் திரைப்படத்திற்கு ஆரம்பத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. பதான் திரைப்படத்தில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் அணிந்துள்ள பிகினி உடை மத உணர்வை புண்படுத்துவதாகவும், பதான் திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் கூறி வந்தன.

ஆனால், பல்வேறு தடைகளை மீறி பதான் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், ஷாருக்கானின் பதான் திரைப்பட வெற்றி குறித்து உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அகிலேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பதான் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிபெற்றுள்ளது. இது இந்தியாவும், உலகம் கொண்ட நேர்மறையான சிந்தனைக்கு கிடைத்த வெற்றி. இது பாஜகவின் எதிர்மறை அரசியலுக்கு கிடைத்த பதிலடி’ என்றார்.

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படம் கடந்த 25-ஆம் தேதி இந்தியா முழுவதிலும் 8000 திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், இப்படம் இந்தியாவில் ரூ. 367 கோடியும் வெளிநாடுகளில் ரூ. 224கோடியும் வசூலித்து மொத்தம் ரூ.591 கோடி வசூலை குவித்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related posts