மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதை விட

மின்சார கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதை தவிர வேறு மாற்று வழி எதுவும் கிடையாதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த வருடத்தில் மின்சார சபை 152 பில்லியன் ரூபா நட்டமடைவதுடன் 2013ஆம் ஆண்டு முதல் இதுவரை 300 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சபையில் தெரிவித்த ஜனாதிபதி அடுத்த வருடம் வழமையான மின்சார உற்பத்திக்கு மேலதிகமாக 420 பில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

அடுத்த வருடம் நாட்டில் சாதாரண மழை வீழ்ச்சி காணப்படுமானால் 352 பில்லியன்களும், அதிகவில் மழை பெய்து வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டால் 295 பில்லியன்களும் தேவைப்படுமென குறிப்பிட்ட ஜனாதிபதி அரசாங்கத்துக்கென வேறு வருமானம் இல்லாத நிலையில் இந்த பாரிய நிதியை எவ்வாறுப் பெற்றுக்கொள்வது என்றும் கேள்வி எழுப்பினார். அதேவேளை, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அதிகாரம் மின் சக்தி அமைச்சருக்கு கிடையாதென பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்து வருகின்றார்.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் சட்டத்தை நானே உருவாக்கினேன். எனவே அந்த விடயத்தில் யாருக்கு அதிகாரம் காணப்படுகிறது என்பது எனக்குத் தெரியும். அந்த ஆணைக்குழுவின் தலைவர் அவ்வாறு கூறுவதற்குக் காரணமுள்ளது. ஏனென்றால் அவருக்கே அதிகளவிலான சொகுசு தொடர்மாடிக் குடியிருப்புகள் சொந்தமாகக் காணப்படுகிறது. அந்த வகையில் மின்கட்டணம் அதிகரித்தால் தமக்கே செலவு அதிகமாகுமென அவர் நினைத்துள்ளார். அவர் தொடர்பில் பாராளுமன்றமும் தீர்மானம் எடுக்க முடியும் என்பதை சபையில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தம்மை சந்திப்பதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப் போவதாகவும் குறிப்பிட்டார்.

Related posts