பட்டத்து அரசன்’ படத்தின் டிரைலர்

நடிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குருதி ஆட்டம்’, ‘டிரிக்கர்’ போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் அடுத்ததாக அதர்வா ‘களவாணி’ , ‘வாகை சூடவா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.சற்குணம் இயக்கத்தில் ‘பட்டத்து அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

லைகா புரொடக்‌சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

அதிரடி, ஆக்சன் காட்சிகளுடன் வெளியான இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related posts