ஆக்‌ஷன் த்ரில்லர் – ஜெய் நடிக்கும் புதிய படம்

நடிகர் ஜெய் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் ஒன்றில் சூப்பர் ஹீரோவாக நடிக்க உள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

‘காஃபி வித் காதல்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜெய் நாயகான நடிக்கும் படம் ‘ப்ரேக்கிங் நியூஸ்’. ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கும் இப்படத்திற்கு விஷால் பீட்டர், முத்து கணேஷ் இசையமைக்கின்றனர். தெலுங்கு நடிகை பானு ஸ்ரீ நாயகியாக நடிக்கிறார். ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும் சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

மேலும், பழ.கருப்பையா, இந்திரஜா, ஜெய் பிரகாஷ், சந்தானபாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் நடிகர் ஜெய் ரோபோக்களுடன் சண்டையிடும் ஆக்‌ஷன் காட்சிகள் மிக பிரம்மாண்டாக படமாக்கப்பட்டுள்ளன.

சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்கள் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Related posts