நித்தம் ஒரு வானம்’ படத்தின் டிரைலர்

அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படம் மலையாளத்தில் ‘ஆகாசம்’ என்ற தலைப்பில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts