ஜப்பான் மொழியில் ‘ஆர்ஆர்ஆர்’ படம்

ஜப்பான் மொழியிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு ‘ஆர்ஆர்ஆர்.’ படம் வெளியாகி இருக்கிறது. ‘பாகுபலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ராஜமவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்.’ படமும் பிரமாண்டத்தின் உச்சமாகவே பார்க்கப்பட்டது.
இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ‘பான் இந்தியா’ படமாக வெளியான ‘ஆர்ஆர்ஆர்.’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படம் ரூ.1,000 கோடி வசூலை எட்டி சாதனை படைத்தது. இந்தியாவில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, அந்தந்த மொழிகளில் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஜப்பான் மொழியிலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு ‘ஆர்ஆர்ஆர்.’ படம் வெளியாகி இருக்கிறது. இது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆர்ஆர்ஆர் படம் இந்தியா சார்பில் ஆஸ்கார் போட்டிக்கு அனுப்படும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்த நிலையில் தேர்வாகாமல் ஏமாற்றம் அளித்தது.

Related posts