ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் ‘ஆர்ஆர்ஆர்’

என்.டி.ஆர், ராம்சரண் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஆர்ஆர்ஆர் மற்றும் பார்த்திபனின் இரவின் நிழல் ஆகிய படங்கள் தேர்வாகாதது படகுழுவினருக்கு சினிமா துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கார் விருது கருதப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது போட்டிக்கு உலகம் முழுவதிலும் இருந்து தகுதியான படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ஆஸ்கார் விருது போட்டியில் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பிரிவில் போட்டியிட இந்தியா சார்பில் குஜராத்தி படமான செல்லோ ஷோ தேர்வு செய்து அனுப்பப்பட்டு உள்ளது.

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஆர்ஆர்ஆர் மற்றும் பார்த்திபனின் இரவின் நிழல் ஆகிய படங்கள் தேர்வாகாதது படகுழுவினருக்கு ஏமாற்றத்தை அளித்தது.

ஆனாலும் ஆஸ்கார் விருதுக்கான பொதுப்பிரிவில் வெளிநாட்டு படங்கள் நேரடியாக கலந்து கொள்ளும் நடைமுறையும் வழக்கத்தில் உள்ளது. இதன் அடிப்படையில் ‘ஆர்ஆர்ஆர்’ படமும் ஆஸ்கார் போட்டியில் கலந்து கொள்கிறது.

சிறந்த திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர்கள், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கதை, சிறந்த பாடல், சிறந்த இசை உள்ளிட்ட 9 பிரிவுகளில் ‘ஆர்ஆர்ஆர்’ படம் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2020-ல் வெளிநாட்டு படங்கள் பிரிவில் பாரசைட் என்ற கொரிய மொழி திரைப்படம் 6 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

Related posts