தியாகதீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

பாரத தேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தன் வாழ்வை தமிழரின் விடுதலைக்காக ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபன் உண்ணா நோன்பிருந்த முதலாவது தினம் இன்றாகும்.

தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் இடம்பெறுகிறது.

அந்தவகையில் தியாகதீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மல்லாவியில் சிறப்பாக இடம்பெற்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியும் சர்வ ஜன நீதி அமைப்பும் இணைந்து 10.09.2022 அன்று காங்கேசன்துறையில் ஆரம்பித்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்கக் கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்துப் போராட்டம் இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி நகரை வந்தடைந்த நிலையில் அங்கு தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஸ்ரிக்கப்பட்டது.

. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்கக் கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டு சுடர் ஏற்றி அஞ்சலி இடம்பெற்றது.

Related posts