விருதுகளை அள்ளிக்குவித்த ஸ்குவிட் கேம்

அமெரிக்க தொலைக்காட்சி உலகில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘எம்மி’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அனைவரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 74-வது எம்மி விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 2020-ம் ஆண்டு வழங்கப்பட்ட எம்மி விருதுகளில் 8 விருதுகளை வென்று அசத்திய ‘சக்ஸஷன்’ தொடர், இந்த முறையும் சிறந்த தொடருக்கான விருது உள்பட மொத்தம் 4 விருதுகளை வென்று மீண்டும் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதே போல் சர்வதேச ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட பிரபல தென் கொரிய வெப்சீரீஸான ‘ஸ்குவிட் கேம்’ 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சிறந்த நடிகர் உள்பட 6 விருதுகளை தட்டிச் சென்றது.
சிறந்த நடிகருக்கான விருது ஸ்குவிட் கேமில் நடித்த லீ ஜுங் ஜேவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது ‘யூஃபோரியா’ தொடரில் நடித்த ‘ஸ்பைடர்மேன்’ புகழ் சென்டாயாவுக்கு வழங்கப்பட்டது.
இது தவிர ‘யூஃபோரியா’ தொடர் மேலும் 5 விருதுகளை அள்ளிக் குவித்தது. சிறந்த நகைச்சுவைத் தொடர் உள்பட 4 விருதுகளை ‘தெட் லாஸ்கோ’ தொடர் வென்றது.
மேலும் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட ‘ஸ்டேரஞ்சர் திங்ஸ்’ தொடர் மொத்தம் 5 விருதுகளை வென்று குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts