‘வீரா சூரா’ பாடல் வெளியானது

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இந்த திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘வீரா சூரா’ இன்று வெளியாகி உள்ளது.
இந்த பாடல் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது

Related posts