ஒரே நாடு என்ற எண்ணமே தவறான எண்ணம்

நானும் என்னுடைய கட்சியும் நீண்ட நாட்களாக எச்சரித்து வருகிறோம். ஒரே நாடு என்ற எண்ணமே தவறான எண்ணம். இந்த நாட்டிற்கு உள்ளே பல மாநிலங்கள் இருக்கின்றன. பல மொழிகள் இருக்கின்றன. பல கலாச்சாரங்கள் இருக்கின்றன.பல வரலாறுகள் இருக்கின்றன. பல பழக்கவழக்கங்கள் இருக்கின்றன.
மாநில அதிகாரி மாநில அரசின் அதிகாரங்களில் தலையிடக்கூடாது. மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சி இது. நீட் தேர்வை எதிர்ப்பதற்கு பல காரணங்களை சொல்கிறார்கள்.
நான் ஒரு காரணத்தை தான் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறேன். ஒரு மாநிலம் தன்னுடைய நிதியிலிருந்து தன்னுடைய மாநில மக்களுக்காக கல்லூரி நிறுவினால் அதில் எந்ந மாணவர்களை சேர்ப்பது என முடிவெடிப்பதற்கு அந்த மாநிலத்திற்கு அதிகாரம் கிடையாதா? இது என்ன வேடிக்கை.
பொம்மை அரசாக மாநில அரசுகள் இருக்கும், மத்திய அரசு தான் எல்லா முடிவுகளை எடுக்கும் என்றால் என்ன அரசு முறை? பல காரணங்கள் இருந்தாலும் இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே நீட்டை எதிர்க்கலாம். இப்போது நீட், க்யுட் என எல்லா தேர்வுகளையும் ஒருங்கிணைத்து ஒரே தேர்வு என்றால் மாநில அரசு எதற்கு?
மாநில உயர்கல்வி அமைச்சர் எதற்கு? உயர்கல்வி துறை எதற்கு? என கேள்வி எழுப்பினார். ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை, ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு, ஒரு நாடு ஒரு தேர்வு, ஒரு நாடு ஒரு மொழி, ஒரு நாடு ஒரு கலாச்சாரம், ஒரு நாடு ஒரு பழக்கவழக்கம், ஒரு நாடு ஒரு கட்சி என்று வந்து நிற்கும்.
ஒரு நாடு ஒரு தலைவர் என வரும். இந்த விபரீத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். அந்தந்த மாநிலத்தில் உள்ள மக்கள் அவர்கள் பல பொருட்களில் சுயாட்சி பெற்ற அமைப்பாக சுயமாக சிந்தித்து முடிவெடுக்க கூடிய அமைப்பாக மாநில அரசுகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன.

Related posts